யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை 24மணிநேரமும் வழங்குவது குறித்து கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள பிரதான நீர் வழங்கல் செயற்திட்டப் பகுதியை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அது தொடர்பில் ஆராய்ந்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இருபாலை வீதி கோண்டாவில் பகுதியில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியினருக்கு குடிநீர் விநியோகத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. நாளொன்றுக்கு 03மணிநேரம் மட்டுமே இந்நீர் வழங்கும் செயற்திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் 24மணிநேரமும் மாநகர சபைக்குட்பட்ட பகுதியினருக்கு நீர் வழங்குவது தொடர்பாகவும் நிலாவரையிலிருந்து நீரைச் சேகரித்து அங்கிருந்து வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் அவர்கள் ஆராய்ந்துள்ளார்.
குறிப்பாக அரசுடன் இணைந்து இச்செயற்திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் பிரதான கிணறுகளைப் பார்வையிட்டதுடன் கிணறொன்றுக்கு அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தை தற்காலிகமாக வழங்குமாறும் அப்பகுதியிலுள்ள கிணற்றைச் சூழ பாதுகாப்பு வேலி அமைக்குமாறும் அத்துடன் குறித்த பகுதியில் பயன்தரு மரங்களை நடுகை செய்யுமாறும் யாழ் மாநகர சபை முதல்வரிடம் பணித்துள்ளார்.
இதன் போது யாழ் மாநகர சபை பொறியியலாளர் ஹென்டர்சன் நீர் வேலைப் பகுதி மேற்பார்வையாளர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’