வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

வீடுகளில் சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர்களை ஊக்குவிக்குமாறு தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் கோரப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது
.ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது. ஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவத்றகு வேறு வழிகளை கண்டறியக்கூடும் என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.
சுமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதில் தடுப்தில் நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. எனவே தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்களi பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.
சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்துவது தொர்பாக பெற்றோர், பொலிஸ், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உட்பட பல தரப்பினரடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே நாம் 1000 இற்கும் அதிகமான இணையத்தளங்களை நீதிமன்ற உத்தரவின்பேரில் தடை செய்துள்ளோம் என அவர் கூறினார்.
இதேவேளை மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் தினமும் 13 வயதுக்குட்பட்ட சுமர் 20, 000 சிறார்கள் அவ்வலைத்தளத்தை பயன்படுத்துவதை தடைசெய்து வருவதாக தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’