வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையில் விசாரணை நடத்த முடியாது: ஜனாதிபதி

ஐ.நா ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யமுடியும். எனினும் அவர்கள் இலங்கையல் விசாரணை எதையும் நடத்த முடியாது என ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
.வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
லிபியா நிலைவரம் குறித்து கருத்து கேட்டபோது. "எவரும் தமது நாட்டின் பிரஜைகளுக்கு தீங்கிழைக்க முடியாது. மக்களை கொல்லும் எவரும் அவர்களுடன் இருப்பவர்கள் அல்லர்"என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
"பொதுமக்களை கொல்பவர்களுடன் நாம் இல்லை. அத்துடன் எந்த நாட்டினதும் இறைமையை மீற முடியாது"என ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, லிபியாவில் கூட்டுப்படைகளின் செயற்பாடுகள், ஐ.நா.வின் 1973 ஆவது தீர்மானத்தினால் வழங்கப்பட்ட ஆணையை மீறிச் செல்வதுபோல் தென்படுவதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’