வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மார்ச், 2011

புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு மேன்முறையீட்டை கனடிய நீதிமன்றம் நிராகரிப்பு

யங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் கனடாவில் முதற்தடவையாக வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிராகரித்துள்ளது.
தமிழ்ப்புலிகளுக்காக நிதி சேகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபாகரன் தம்பித்துரை (46 வயது) என்பவர் கடந்த மே மாதம் கனடாவினால் குற்றவாளியென அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருக்கு பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதி ரொபேர்ட் பவர்ஸ் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்திருந்தார். இத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த வேண்டுகோளை பிரிட்டிஷ் கொலம்பிய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதற்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
ரொறன்ரோவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், 2008 மார்ச் இல் வன்கூவருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் கனடிய பொலிஸாரின் கண்காணிப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. பல வீடுகளுக்குச் சென்ற அவர் 600 டொலரை தமிழ்ப்புலிகளுக்காகச் சேகரித்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவரின் வாகனத்தைச் சோதனையிட்டபோது நிதிதிரட்டும் 25 ஆவணப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழில் அவை எழுதப்பட்டிருந்தன. அத்துடன், இலங்கை ஆயுதப்போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த தமிழ்மொழியிலான சி.டி.க்கள்,டி.வி.டி.க்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பிரசாரத்திற்கான விடயங்கள் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தான் பணத்தைத் திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்தப் பணம் இலங்கையில் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்து தனக்குத் தெரியாதென அவர் கூறியுள்ளார். தம்பிதுரை ஒருபோதுமே அந்த அமைப்பின் உறுப்பினரல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்பிதுரை 1988 இல் கனடாவுக்கு அகதியாகச் சென்றவராகவும். 1995 இல் அவருக்கு கனடிய பிரஜாவுரிமை கிடைத்தது.கைதுசெய்யப்பட்ட பின்னர் 25 ஆயிரம் டொலர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’