வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மார்ச், 2011

யாழ். சகலகலாவல்லி வித்தியாலய கட்டடத் திறப்பு விழா!

சாவகச்சேரி மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் தேவைகள் விரைவில் எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் மூலம் நிறைவேற்றித்தரப்படும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (15) யாழ்.மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்தகால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இவ்வாறான உதவிகள் என்பது மிகவும் பாராட்டத்தக்கது.

எனவே மக்களது எதிர்பார்ப்புக்களுடன் அவர்களது வாழ்வு வளம் பெற எம்மாலான அனைத்து உதவிகளை செய்யத் தயாராகவுள்ளோம். இன்று இந்தப்பாடசாலை மட்டுமல்ல இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடுகளும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதயன் அவர்கள் தெரிவித்தார்.

இப்பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபர் அவர்கள் எனக்கு தெரியப்படுத்தியுள்ளார். எனவே அதனை வருகின்ற ஆண்டிற்கான எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து அத்தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான இணைப்பாளர் தோமஸ் லிச்சர் மற்றும் அந்நாட்டின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சாள்ஸ் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் படையதிகாரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’