வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

நல்லிணக்க ஆணைக்குழு அம்பாறையில்

லங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிலிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு ஞாயிறன்று கல்முனையில் நடைபெற்றது.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் பெண்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் அங்கு வந்திருந்த போதிலும் சுமார் 25 பேரிடம் மட்டுமே வாய் மூல சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.ஏனையோரது சாட்சியங்கள் எழுத்து மூலம் அதற்கான படிவமொன்றில் பெறப்பட்டது
அநேகமானோர் காணாமல் போயுள்ள தமது உறவுகளை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சிவலிங்கம் கலாமாலினி என்பவர், காணாமல் போயுள்ள தனது மகனை, கருணா அணியினரின் கூட்டமொன்று தொடர்பாக தொலைக் காட்சியொன்றில் ஒளிபரப்பான செய்தியில் கண்டதாக குறிப்பிட்டு குறித்த செய்தி அடங்கிய இறுவட்டு பிரதியொன்றையும் சமர்ப்பித்தார்
யுத்த காலத்தில் காணாமல் போயுள்ள மற்றும் கொல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க ஆணைக்குழு முன் வர வேண்டும் என கோரிக்கையொன்றை முன் வைத்த சட்டத்தரணி அன்சாருல் மௌலானா, அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்டப்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை குறிதும் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தற்போது புனர்வாழ்வு அளித்தால் போதாது புளொட்,ஈ.பி.டி.பி. உட்பட சகல தமிழ் அமைப்புகளையும் சேர்ந்தவர்களுக்கும் புனர் வாழ்வு அளிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆணைக்குழுவிடம் முன் வைத்தார் நடராசா கிருபைராசா.
கொழும்பிற்கு வெளியேயான ஆணைக்குழுவின் அமர்வுகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’