வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 21 மார்ச், 2011

சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா-தேர்தலில் போட்டி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நண்பரும், சமீபத்தில் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தவருமான சாதிக்பாட்சா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்தவர் டாக்டர் டெக்கால், திடீரென தனது அரசு டாக்டர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தான் தேர்தலில் நிற்கப் போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்க மறுத்து விட்டதால் அவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாதிக்பாட்சா கடந்த கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை செய்தவர் டாக்டர் டெக்கால்.
பிரேதப் பரிசோதனை முடிவுகுறித்து இவர் செய்தியாளர்களுக்கும் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது டெக்கால் கூறுகையில், கழுத்து நெரிபட்டதால் மூச்சுத் திணறி சாதிக் பாட்சா இறந்தார் என்று அவர் கூறினார். கழுத்து நெரிபட்டது மரணத்திற்குப் பின்பா, முன்பா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் டெக்கால்.
இந்த நிலையில், அரசு டாக்டர் பணியை ராஜினாமா செய்துள்ளார் டெக்கால். மேலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், தனக்கு சில கட்சிகள் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார் டெக்கால்.

அரசு நிராகரிப்பு:

இந்த நிலையில் டாக்டர் டெக்காலின் ராஜினாமாவை தமிழக அரசு நிராகரித்து விட்டது. மேலும் அவரை பணியிலிருந்து விடுவிக்கவும் அது மறுத்து விட்டது.
இதுகுறித்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனை ஆர்.எம்.ஓ. இளங்கோ கூறுகையில், மார்ச் 3ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் டெக்கால். சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனைக்கு முன்பாகவே அவர் கொடுத்து விட்டார். தற்போது மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. அவர் செவ்வாய்க்கிழமையன்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

திமுககாரர்:

டாக்டர் டெக்காலின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டெக்கால் ஏன் திடீரென தேர்தல் களத்தில் குதிக்க முடிவு செய்தார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’