வெள்ளைக் கொடி வழக்கில் அரசுக்கு எதிராக தாம் சாட்சியம் அளிக்கப் போவதாக முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் அரச படையினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித் தேவன் மற்றும் அவர்களோடு வந்த போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்த வழக்கு விசாரணையின் போது தனது வழக்கறிஞர் மூலமாக சரத் பொன்சேகா இதை தெரிவித்துள்ளார்.
இது குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. புதன் கிழமை நடந்த விசாரணையின் போது தான் உட்பட பத்து பேர் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கப்போவதாக பொன்சேகா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜெயசூர்ய, மங்கள சமரவீர, அனுர குமார திஸநாயக உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரும் அடங்கும்.
இலங்கை அரசு சரணடைய முன்வந்த யாரும் கொல்லப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’