வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மார்ச், 2011

தற்பொழுது வந்த செய்தி

வெலிகம நகர சபையை ஐ.ம.சு.மு. கைப்பற்றியது
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7,246 வாக்குகளை பெற்று 7ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 3,622 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது.
வத்தேகமவில் ஐ.ம.சு.மு. வெற்றி
கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது. அக்கட்சி 2177 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1612 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும் முதலாம் இலக்க சுயேட்சைக்குழு 479 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
ஹப்புதளையில் ஐ.ம.சு.மு. வெற்றி
பதுளை மாவட்டத்தின் ஹப்புதளை நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1,205 வாக்குகளுடன் 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
ஐக்கிய தேசிய கட்சி 703 ஆசனங்களுடன் 3 ஆசனங்களை பெற்றுள்ளது. மலையக மக்கள் முன்னணி 48 வாக்குகளைப் பெற்றுள்ளது.
குளியாபிட்டிய நகர சபை ஐ.தே.க. வசம்
குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய நகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 1745 வாக்குகளுடன் 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1370 ஆசனங்களுடன் 3 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜே.வி.பி. 56 வாக்குகளையும் முதலாம் இலக்க சுயேட்சைக் குழு 2 வாக்குகளையும் பெற்றுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’