வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மார்ச், 2011

இங்கிலாந்து அணி திரில் வெற்றி

லக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக டிராட் 47 ரன்கள் (38 பந்து 7 பவுண்டரி), ரைட் 44 ரன்கள் (57 பந்து, 5 பவுண்டரி) எடுத்தனர். ஸ்டிராஸ் 31 ரன்கள், பெல் 27 ரன்கள், பிரையர் 21 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரசெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்து இறுதியில் 44.4 ஓவர்களில் 225 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்களை பறிகொடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரசெல் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்களும், சேமி 21 பந்தில் 8 பவுண்டரி ஒசு சிக்சருடன் 41 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் டிரிட்வெல் 4 விக்கெட்களையும், ஸ்வான் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’