வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மார்ச், 2011

ஐ.ம.சு.மு. முன்னிலையில்

2011ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 205 உள்ளூராட்சி மன்றங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

இதுவரையில் 234 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மன்னார் நகரசபை மற்றும் பிரதேச சபை, வவுனியா பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை, திருகோணமலை நகர சபை, நாவிந்தவெளி பிரதேச சபை ஆகியவை உள்ளடங்கலாக இலங்கைத் தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியீட்டியுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியானது குளியாப்பிட்டிய நகரசபை, கம்பொல நகரசபை, பண்டாரவளை மாநகரசபை, கடுகண்ணாவை நகரசபை, களுத்துறை நகரசபை உள்ளடங்கலாக09 உள்ளூராட்சிமன்றங்களில் வெற்றி பெற்றுள்ளது.
வத்தளை மாபொல நகரசபை, வத்தளை பிரதேசசபை, பேலியகொட நகரசபை உட்பட கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த உள்ளூராட்சிமன்றங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உட்பட 04 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபை உட்பட 02 உள்ளூராட்சி மன்றங்களிலும் மலையக மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன தலா ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’