வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 மார்ச், 2011

புத்தாக்கக் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் அமைச்சர் வழங்கி வைத்தார்

னாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் சிறந்த கொள்கைக்கு அமைவாக சிறு கைத்தொழில் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் பத்தரமுல்லை ஜனகலா கேந்திர நிலையத்தில் புத்தாக்கங்களை வழங்கி பங்களிப்பை வழங்கிய கலைஞர்கள் மற்றும் பயிலுனர்களை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நிகழ்வு வரவேற்கத்தக்கதுடன் இதை ஒழுங்கு செய்த யாவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் சிறந்த கொள்கைக்கு அமைவாக சிறு கைத்தொழில் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமென்ற நம்பிக்கையில் தான் அவர் என்னிடம் இந்த அமைச்சைத் தந்துள்ளார்.

எனவே எனது இந்த அமைச்சின் ஊடாக எதிர்காலத்திலும் இவ்வாறான பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அவர்களும் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு மங்கள விளக்கேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய வடிவமைப்பு நிலையத்தின் பணிப்பாளர் விஜயக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடிவமைப்பு நிலையத்தின் ஊடாக புத்தாக்கங்களை படைத்து பங்களிப்பை வழங்கிய கலைஞர்கள் மற்றும் பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சான்றிதழ்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அவர்களும் ஏனைய துறைசார் அதிதிகளும் வழங்கி கௌரவித்தனர்.

இன்றைய இந்த நிகழ்வில் பயிற்சிகளை நிறைவு செய்த நாடளாவிய ரீதியிலான 83 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு கீழான துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் பலரும் கலந்து கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’