வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மார்ச், 2011

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சுனாமி நிவாரணம் அனுப்புவது குறித்த இந்திய, அமெரிக்க நிலைப்பாடுகள்

ந்தியாவின் உதவிகள் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு சென்றடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறுவது தமிழீழத்தை அங்கீகரிப்பதாக அமையுமென்பதால், இந்திய உதவி இலங்கை அரசாங்கத்தின் மூலம் எல்.ரி.ரி.ஈ.யின் பகுதிகளுக்கு செல்வதையிட்டு தனக்கு 'ஆட்சேபம் இல்லை' என 2004ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் இந்தியா கூறியதென விக்கிலீக்ஸ் வெளியிட்ட, அமெரிக்க தூதரகத்தின் கேபிள் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

உதவிகள், நேரடியாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மூலம் வழங்கப்பட வேண்டுமென எல்.ரி.ஈ.ஈ. கூறியதை ஏற்கமுடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் தறன்ஜித்சிங் சந்து கூறினார்.
இந்தியாவின் நிலைப்பாட்டையே அமெரிக்க அரசாங்கமும் கொண்டிருப்பதாக இந்தியாவிலிருந்த அமெரிக்க தூதுவர் டேவிட் மல்பீல்ட் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் அண்மையிலுள்ள இலங்கை, அமெரிக்கத் துருப்புக்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென கருதப்பட்;ட நிலையில், இலங்கையில் 1,500 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன என்ற செய்தி தவறானதென அறிய வந்தபோது தறன்ஜித்சிங் சந்து ஆச்சரியமடைந்தாரென கேபிள் வெளியிட்ட செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
சுனாமி நிவாரணம் பற்றிய கருத்துக்கள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தப் பயன்படுமென எல்.ரி.ரி.ஈ. கருதுவது நப்பாசையாகுமென தறன்ஜித்சிங் சந்து தெரிவித்தார்.
சுனாமியின் பின் உண்டான பிரச்சினைகளால், இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சண்டையிடும் வலுவை இழந்;த நிலையில் ஏதோவொரு வகையில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டென தறன்ஜித்சிங் சந்து கருதியதாக கேபிள் செய்தி வெளியிட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’