விமானத்தை செலுத்துபவர் ஒரு பெண் என்பதை அறிந்த பயணியொருவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய மறுத்த சம்பவம் அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது
.இதனால் டில்லியிலிருந்து மும்பை நோக்கி செல்ல இருந்த மேற்படி பயணிகள் விமானம் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதாமாகவே புறப்பட்டது.
இன்டிகோ நிறுவனத்தின் இந்த விமானம் தாமதாமாக புறப்பட்டமைக்கு முதலில் பனி காரணமாகியது எனவும் பின்னர் பயணியொருவரின் குழப்பம் காரணமாகியது எனவும் ஏனைய பயணிகள் தெரிவித்தனர்.
பார்தா குஹா எனும் மற்றொரு பயணி இது குறித்து கூறுகையில்,
முதலில் குறித்த விமானமானது பனி காரணமாக தாமதமாகியது. பின்னர் காலை 9 மணியளவில் கதவுகள் திறக்கப்பட்டன. நாங்கள் விமானத்தில் ஏறி அமர்ந்தோம். அதன்பின் எனக்கு சில ஆசனங்கள் தள்ளி இருந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர்,விமானத்தை பெண்ணொருவர் செலுத்துவற்கு ஆட்சேபம் தெரிவித்தார் ' என தெரிவித்துள்ளார்.
விமானி, ஒலிபெருக்கி மூலம் சம்பிரதாய பூர்வமாக பயணிகளை விளித்து அறிவித்தல் செய்தபோதே அவ்விமானி பெண் என்பதை மேற்படி பயணி அறிந்துகொண்டாராம்.
அதன்பின் அவர் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளார். 'அவர்களுக்கு வீட்டையே நிர்வகிக்க முடியாது. விமானத்தை எப்படி நிர்வகிக்கப்போகிறார். நான் எனது உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்க தயாரில்லை' என அப்பயணி கூச்சலிட்டார்.
அதனால் விமான நிலையத்திலிருந்த உத்தியோகஸ்தர்களும் இதில் தலையிட வேண்டியிருந்தது. அப்பயணியும் அவரின் பொதிகளும் விமானத்திலிருந்து இறக்கப்படுவதாக உறுதியளித்த பின்னரே அவர் அமைதியடைந்தாராம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’