பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பு பத்தரமுல்லையில் அமையப் பெற்றுள்ள கித்துள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து விற்பனை நடவடிக்கையையும் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் ஜனகலா மையம் பத்தரமுல்லையில் புதிதாக அமையப்பெற்ற விற்பனை நிலையமே இன்று (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது
முன்பதாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்தைச் சென்றடைந்ததும் அங்கு தேசியக் கொடியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றி வைத்தார்.
நிலைய வளாகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க அவர்களும் கித்துள் மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.
தொடர்ந்து விற்பனை நிலையத்தினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கித்துள் சார்ந்த உற்பத்திப் பொருட்களை பார்வையிட்டதுடன் ஒரு தொகுதி பொருட்களை கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கையினையும் சம்பிரதாயப+ர்வமாக தொடக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி. வி. ஜெகராஜசிங்கம் உள்ளிட்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு கீழான துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’