வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக வழக்கு

டைபெறவுள்ள எம்பிலிப்பிட்டிய நகரசபை தேர்தலுக்காக வேட்புமனு பத்திரங்களை ஏற்க மறுத்தமைக்கு எதிராக ஆணைகோரும் மனுவொன்றை ஐக்கிய தேசியக்கட்சி இன்று தாக்கல் செய்தது. ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தாக்கல் செய்துள்ளார்.

ஐ.தே.க. கட்சியின் நகரசபை தேர்தலுக்கான முகவராக அபயநாயக்க பியதாஸ என்பவரை நியமித்தோம். அவர் நான்கு இளைஞர் வேட்பாளர் உட்பட 11 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட நியமன பத்திரங்களை தாக்கல் செய்தார்.
இந்த நியமன பத்திரங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட சத்திய கடதாசியில் ஒரு இளைஞர் வேட்பாளரின் பெயர் சரியாக எழுதப்படாததால் அவரது நியமன பத்திரங்கள் ஏற்கபடமாட்டாது என தெரிவத்தாட்சி அலுவலர் அபேயநாயக்க பியதாஸவிடம் வாயால் கூறினார் என திஸ்ஸ அத்தநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஏற்படாமல் விட்டதற்கான காரணமான உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டப்பிரிவையும் தெரிவத்தாட்சி அலுவலர் கூறினர். மனுதாரர் அத்தநாயக்க நியமன பத்திரங்களை ஏற்க மறுத்தமை சட்டத்துக்கு மாறானது என கூறியுள்ளார்.
எனவே இது தொடர்பில் ஆணைகோரும் மனுவை தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு எதிராக தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு எனவும் திஸ்ஸ அத்தநாயக்கா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’