வவுனியாவில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்கள் அனைத்தும் நீர்நிரம்பி வான்கதவுகள் திறந்துவிடப்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதால் பெரும்பாலான கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளினுள்ளும் தண்ணீர்புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு இடம்பெயர்வை சந்தித்துள்ளனர். சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான பூந்தோட்டம் திருநாவற்குளம் தாண்டிக்குளம் போன்ற பகுதிகளை வவுனியா நகரசபை எதிர்கட்சி தலைவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேட்டுநில பயிர்களான உளுந்து கௌபி பயிறு போன்ற பயிர்கள் முற்றாக அழிந்துள்ளன. ஏற்கனவே நெற்பயிர்கள் நோயினாலும் வெள்ளத்தினாலும் அழிந்துள்ளன.
இதனைப்போன்றே வாழை பயிர்ச்செய்கையும் அழிந்து விவசாயிகளுக்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைப்போன்றே வாழைபயிர்ச் செய்கையும் அழிந்து விவசாயிகளுக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவற்குளம் வான்கதவுகளை தாண்டி ஒரு அடி தண்ணீர் நிரம்பி வழிவதால் நான்கு கதவுகளிலும் 20 அங்குல அளவிலான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் நெலுக்குளம் நேரியகுளம் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நெலுக்குளம் நேரியகுளம் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மழை நின்றாலும் இன்னமும் மூன்று தினங்களில் வெள்ளம் வடிந்துவிடும் என்று நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.
திருநாவற்குளம் பகுதியில் 100க்கணக்கான வீடுகளால் நிரால் சூழப்பட்டுள்ளது. மழைநீர் கிணற்றுநீர் மலசலகூட நீர் ஆகியவை ஒன்றாக கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. திருநாவற்குளத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 800 பொதுமக்கள் திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளனர். கைக்குழந்தைகளுடன் காணப்படும் உணவின்றி பெரும் துன்பப்படுகின்றனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வவுனியா வர்த்தக சங்கத்தினர் சேவாலங்கா போன்ற பல அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’