வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்திலேயே ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர்: தயாசிறி

ருடத்தில் ஜனவரி மாதமே ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். லங்கா இ - நியூஸ் அலுவலகம் ஜனவரி மாதம் 31 ஆம் நாள் தாக்கப்பட்டது. இந்நாளானது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊடவியலாளர்களுக்கான மர்மான நாளாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஊடகங்கள் மீதான தாக்குதல் மற்றும் அடக்கு முறைக்கு எதிராக கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்தபோதே தயாசிறி எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதோடு தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இதேவேளை, ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், இவற்றை யார் மேற்கொள்கின்றார்கள் எனத் தெரியவில்லை.
இதேவேளை ஊடக நிறுவனங்களில் போதைப் பொருட்களும், முறைகேடான செயல்களும் இடம்பெறுவதாலே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் போதைப்பொருள் கடத்துபவர்கள் அரசாங்க பாதுகாப்பில் இருப்பதோடு அவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பையும் வழங்கி வருகின்றது. இதனைத் தவிர்த்து ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’