வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 பிப்ரவரி, 2011

ஈரானிடமிருந்து ஆயுதம் வாங்குவது சட்டவிரோதம்; இலங்கையை எச்சரித்த அமெரிக்கா

ரானுடனான இலங்கையின் மிக நெருங்கிய உறவு குறித்து இலங்கையை அமெரிக்கா எச்சரித்திருந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்கத் தூதுவரும் பிரதித் தூதுவரும் அப்போதைய வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென்ன, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமெரிக்கத் தூதரக தகவல் பரிமாற்றக் குறிப்புகள் (கேபிள்) விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினால் பிரிட்டனின் டெலிகிராவ் பத்திரிகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஐ.நா.பாதுகாப்புச் சபையின் 1747 ஆவது தீர்மானத்தின்கீழ் ஈரானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது சட்டவிரோதமானது எனவும் அதன்மூலம் அமெரிக்க- இலங்கை உறவில் எதிர்மறையான பின்விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கத் தூதுவரும் பிரதித் தூதுவரும் தெரிவித்ததாக 2007 நவம்பர் 2 ஆம் திகதியிடப்பட்ட மேற்படி கேபிள் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும், வெளிவிவகாரச் செயலாளர் பாலித கொஹென்னவும் ஈரானிடமிருந்து இலங்கை ஆயுதங்களை வாங்க முற்படவில்லை எனவும் அவ்வருட நவம்பர் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானுக்கு மேற்கொள்ளும் விஜயம் வர்த்தக முதலீட்டில் கவனம் செலுத்துவதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். எனினும், ஈரானிலிருந்து சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் குறித்து இலங்கை பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அதற்கு பதிலாக இலங்கை குறிப்பிடத்தக்களவு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை கொடுக்கும் எனவும் அமைச்சர் ஒருவர் கூறியதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’