வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

வடமராட்சி கடற்பிரதேசத்தில் திமிங்கிலக்குட்டி கரை ஒதுங்கியுள்ளது...!

டமராட்சி வடக்கு கடற்பிரதேசத்தில் திமிங்கில குட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இன்று (31) பருத்தித்துறை முனை கடற்பகுதியில் இத்திமிங்கிலக் குட்டி கடற்கரையிலுள்ள முருகைக் கற்பாறை மீது இறந்த நிலையில் ஒங்கியிருந்தது. பின்னர் கடற்தொழிலாளர்கள் அதனைக் கரைக்கு கொண்டு வர பலத்த முயற்சிகள் மேற்கொண்டனர். ஆயினும் உடனடியாக அது சாத்தியப்படவில்லை. கடும் முயற்சிகள் எடுத்து மாலைவேளையில் தான் அதனைக் கரைக்கு இழுத்து வந்து சேர்த்தனர். சுமார் 32.5 அடி நீளமும் 18 அடி விட்டமும் வால் பகுதி 06 அடி நீளமும் கொண்டதாகவும் இருந்தது. அதனைப் பார்க்க மக்கள் அலை அலையாக கடற்கரைக்கு வந்தனர். அதிகமானோர் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டனர். அதிலும் குழந்தைகள் சிறுவர் சிறுமியர்கள் அதிகமாக பெற்றோருடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.
கரை ஒதுங்கிய திமிங்கிலக் குட்டியை கடற்படையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தித் தருவதாகத் தெரிவித்தாக முனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு அருள்தாஸ் தெரிவித்தார். சமீப காலமாக ஆழ்கடல் வாழ் உயிரினங்கள் இவ்வாறு கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு டொல்பின் என்ற கடல் வாழ் உயிரினம் தொண்டமானாறு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.











.   



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’