வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் அனுமதி பெற்று விலக வாய்ப்பு

ராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் பெப்ரவரி 4 முதல் 12 ஆம் திகதி வரை அனுமதி பெற்று இராணுவத்திலிருந்து விலகுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

'இராணுவ சேவையிலிருக்கும்போது விடுமுறை பெறாமல் கடமைக்கு சமுகமளிக்கத் தவறிய அதிகாரிகளும் சிப்பாய்களும் உத்தியோகபூர்வமாக .அனுமதி பெற்று விலகுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என சுதந்திரத் தினத்தையொட்டி இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ' இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
கடமைக்கு சமுகமளிக்கத் தவறியவர்கள் மேற்படி காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட படைப்பிரிவுத் தலைமையகங்களுக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கருமபீடத்தில் இராணுவத்திலிருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
இதை பொதுமன்னிப்பாக கருத முடியாது எனவும் ஆனால் விசேட சலுகையொன்றாகும் எனவும் அவர் கூறினார். கடமைக்குச் சமுகமளிக்காமல் தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’