ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தும் வகையில் எகிப்தில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று ஐ நாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஒளிவு மறைவற்ற அறிக்கையில், மேலும் சுதந்திரமான மற்றும் நியாயமான சமூகத்தை இலக்காகக் கொண்ட மாற்றங்களை விரும்பும் எகிப்தில், இந்த மக்கள் அணிவகுப்புக்கள் ஒரு முக்கியமான தருணமாகும் என்று நவி பிள்ளை கூறியிருக்கிறார்.
நவி பிள்ளையின் இந்த அறிக்கை முகத்தில் அறைந்த மாதிரி நேரடியாகவே இருந்தது. பல தசாப்தங்களாக எகிப்திய அரசியல் முறைமை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி வந்தது என்று கூறிய அவர், அடிப்படை மறுசீரமைப்பு ஏற்படுவதற்கான தருணம் தற்போது வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்கள் பெரும்பாலும் வீரத்துடனும், அமைதியாகவும் இருந்ததாகக் கூறி, அவர்களை நவி பிள்ளை பாராட்டினார்.
எகிப்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அவர், அங்கு கடந்த முப்பது வருடங்களாக மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும், அவர்கள் மனித உரிமைகளை கடுமையாக மீறியதாகவும், சித்ரவதைகளைக் கூட அவர்கள் செய்ததாகவும் கூறினார்.
இந்தப் போராட்டதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள நவி பிள்ளை அவர்கள், தமது அலுவலகத்துக்கு கிடைத்த உறுதி செய்யப்படாத தகவல்களின்படி அங்கு 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
அதிக பலப்பிரயோகத்தை தவிர்க்குமாறு எகிப்திய பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், இணையம் போன்ற தொடர்பு முறைமைகளில் அரசாங்கம் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.
ஏனைய நாடுகளின் கருத்துக்கள்
இதற்கிடையே ஜோர்தானின் இஸ்லாமிய எதிர்க்கட்சி இயக்கம், எகிப்து போன்ற ஒரு போராட்டம் தமது நாட்டில் வரவேண்டும் என்று தாம் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறியுள்ள போதிலும், தமது நாட்டிலும் அரசியல் மறுசீரமைப்பு தேவை என்று கூறியுள்ளது.
எகிப்தில் நடக்கின்ற நிகழ்வுகள் ''ஒரு தொற்று நோயைப் போன்றது'' என்று கூறியுள்ள சிரியாவின் அதிபர் பஷீர் அல் ஆசாத், அவற்றை தலைவர்கள் சரியாகக் கையாள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
லிபியா, அல்ஜீரியா, ஏமன், மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளும் இந்த எகிப்திய போராட்டங்களால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மக்களின் கோரிக்கைகளுக்கு எகிப்திய அதிபர் செவிசாய்க்க வேண்டும் என்று துருக்கிய அதிபர் ரெஜப் தையிப் எர்தோவான் கூறியுள்ளார்.
ஒரு யதார்த்தமான மாற்றம் வரவேண்டும் என்ற அமெரிக்க நிலைப்பாட்டை மீள் வலியுறுத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதுவரான பிராங்க் வின்சர் எகிப்து சென்றிருக்கிறார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’