இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் ஒரு விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்ததில், குறைந்த பட்சம் ஏழு பேர் இறந்து போயுள்ளனர், இருபது பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் தலைநகர் லக்னோவுக்கு மேற்கே சாஜகான்பூரில் ஒரு பாலத்துக்கு கீழாக இந்த விரைவு ரயில் சென்றபோது அதன் கூரையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லை பொலிஸ் சேவையால் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய நிலையில், வேலையில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்களால் அந்த ரயில் நிரம்பி வழிந்தது.
நாநூறுக்கும் அதிகமான இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக பொலிஸார் அறிவித்திருந்தனர். ஆனால், வேலை கேட்டு அங்கு இரண்டு லட்சம் பேர் கூடியிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’