வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 பிப்ரவரி, 2011

வன்முறை அச்சுறுத்தல் கொண்ட உலக கிண்ண பாடலுக்கு ஜனாதிபதி தடை

வுஸ்திரேலிய நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்த கிரிக்கெட் உலக கிண்ண பாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கிணங்க தடை செய்யப்பட்டுள்ளது.

நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணி பறவைத் தீனி போன்று நொறுக்கப்படும், நியூஸிலாந்து அணியினர் தாடைகள் உடைக்கப்படும் என இப்பாடலில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
சிங்கள, தமிழ் வரிகள் கொண்ட இப்பாடலை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என அரசாங்க வானொலி தொலைக்காட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அவமதிக்கும் விதமான வரிகளை அனுமதித்தமைக்காக விளையாட்டுத்துறை அதிகாரிகளையும் ஜனாதிபதி கடிந்துகொண்டுள்ளார்.
இப்பாடல் மோசமான ரசணை கொண்டதென ஜனாதிபதி கருதுகிறார். ஏனைய நாடுகளை அவமதிக்காமல் அணியையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் பாடலை அவர் விரும்புகிறார் என ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரியொருவர் ஏ.எவ்.பிக்கு தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’