இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் கூட்டு செயற் குழுவொன்று அடுத்த மாதம் சந்தித்து பேசவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்
.மீனவர்கள் தொடர்பான 'கூட்டு செயற்குழு இவ்வருடம் மார்ச் மாதம் சந்தித்துப் பேசுவதற்கு எமது இரு நாடுகளும் இணங்கியுள்ளன. அத்துடன் மீனவர் சங்கங்களையும் தமக்கிடையில் தொடர்புகளை பேணுமாறு நாம் ஊக்குவிக்கிறோம். அத்தகைய தொடர்புகள் பரஸ்பரம் நன்மையளிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடலில் ஜனவரி மாதம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் 136 மீனவர்கள் இம்மாத முற்பகுதியில் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் முதலாவது மீனவர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது மீனவர் கடலில் கழுத்து நெறிபட்டு இறந்துள்ளார் இறந்துள்ளதாக கூறப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட அல்லது தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட ஏறத்தாழ அனைத்து சம்பவங்களும் இலங்கைக் கடற்பரப்பிலேயே இடம்பெறுவதாக அமைச்சர் கிருஷ்ணா சுட்டிக்காட்டினார்.
'இது எமது மீனவர்களுககு எதிராக பலவந்தத்தை பிரயோகிப்பதை நியாயப்படுத்தமாட்டாது. எனினும் நீண்டகாலத்தின் பின்னர் அப்பகுதியில் மீன்பிடியை ஆரம்பித்துள்ள இலங்கை மீனவர்கள் குறித்தும் நாம் கரிசனை கொள்ள வேண்டும்' என்றார்.
துப்பாக்கிப் பிரயோகங்கள் வன்முறைகளைப் பயன்படுத்துதல் என்பவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் எமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளோம். இச்சம்பவங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்துமாறும் மீண்டும் அவை நடைபெறாமலிருப்பதை உறுதிப்படுத்துமாறும் நாம் ஏற்கெனவே இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’