இரண்டாம் தலைமுறை செல்லிட தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, ஜேபிசி எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழு அமைப்பதற்கு அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
ஜேபிசி அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என அரசு பிடிவாதமாக இருந்ததால், ஏற்கனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமையாக முடக்கப்பட்டது. தற்போது, பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி, இந்த வார இறுதியில் ரயில்வே பட்ஜெட்டும், அடுத்த வாரத் துவக்கத்தில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் நிலையில், அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வதால், அந்தக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பதால் ஜேபிசி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது என்று அரசு வலியுறுத்தி வந்தது.
ஜேபிசி அமைக்க ஒப்புக்கொள்வதாக அரசு அறிவித்திருப்பதை, எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
ஜேபிசி அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என அரசு பிடிவாதமாக இருந்ததால், ஏற்கனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமையாக முடக்கப்பட்டது. தற்போது, பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி, இந்த வார இறுதியில் ரயில்வே பட்ஜெட்டும், அடுத்த வாரத் துவக்கத்தில் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் நிலையில், அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வதால், அந்தக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பதால் ஜேபிசி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது என்று அரசு வலியுறுத்தி வந்தது.
இதுபற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், ஜேபிசி விசாரணை வேண்டும் என வலியுறுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளை எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை என்றார்.
எதிர்க்கட்சிகள் வரவேற்பு
சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா |
கடந்த 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அமைக்கப்படும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் உத்தேச இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்குத் தணிக்கை ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
அதையடுத்து, அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் ஆ. ராசா பதவி விலகினார். தற்போது அவர் மீது மத்தியப் புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருக்கிறது. விசாரணைக்குப் பிறகு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’