வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

திருமாவளவன் சென்னையில் கைது

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்களை கலந்து கொள்ள சென்ற தன்னை கொழும்பு விமானநிலையத்தில் தடுத்தி மீண்டும் திருப்பி அனுப்பிய இலங்கையைக் கண்டித்து, சென்னையில் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது தனிச் செயலாளர்கள் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இளஞ்சேகுவாரா ஆகியோர் இலங்கை சென்றனர்.
அவர்களை வல்வெட்டித் துறைக்கு அனுப்ப மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக திருமாவளவன் இன்று காலை 5.45 மணிக்கு சென்னை வந்தார்.
இதையடுத்து இலங்கை அரசை கண்டித்து ஆழ்வார் பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் இலங்கை கொடி மற்றும் அதிபர் ராஜபக்சேயின் உருவ படங்களை தீ வைத்து எரித்தனர். பின்னர் பார்வதி அம்மாள் உருவ படத்தை ஏந்தியபடி டி.டி.கே.சாலையில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. மாநில பொருளாளர் முகமது யூசுப், பொது செயலாளர் கலைக்கோட்டுதயம், வன்னியரசு, வீரமுத்து, இளஞ்செழியன், சைதை பாலாஜி, கபிலன், இரா.செல்வம், பொன்னிவளவன், கமலக் கண்ணன் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 25 பேர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் இலங்கை அரசு தடுத்ததற்கு மத்திய அரசுதான் காரணம். ஒரு எம்.பி.யை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடானது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். அதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம் தொடரும்.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். என்னை திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவை இலங்கை அரசு அவமதித்துள்ளது...", என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’