வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

'முல்லை வாக்காளர் பிரச்சினை'

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் பூரணமாக இன்னமும் மீளக்குடியமராத காரணத்தினால் சுமார் இருபதினாயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் வாக்களிப்பதில் சிக்கலை சந்தித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இவை குறித்து அந்த மாவட்டத்துக்கான துணை தேர்தல் ஆணையரான கருணாநிதி அவர்களை கேட்போது, இந்தப் பிரச்சினைகள் குறித்து தான் தேர்தல் ஆணையருக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் குறித்து அவர் விரைவில் முடிவெடுப்பார் என்றும் பதிலளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரு பிரதேச சபைகளைச் சேர்ந்த இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இன்னமும் மீளக்குடியமராமல், வவுனியாவில் உள்ள முகாம்களிலும், ஏனைய பல மாவட்டங்களிலும் இன்னமும் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே அவர்களுக்கான கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது அல்லது அவர்களது பகுதிகளுக்கான தேர்தல் வாக்களிப்பை பின்போடுவது ஆகியன குறித்து நிலைமை அறிக்கை ஒன்றை தான் தேர்தல் ஆணையருக்கு அறிவித்துள்ளதாக கருணாநிதி கூறினார்.
தேர்தல் ஆணையரின் முடிவு விரைவில் தனக்கு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’