வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 பிப்ரவரி, 2011

இந்திய-இலங்கை உறவில் விரிசலில்லை; மீனவர் பிரச்சினை சிறிய விடயமாகும்

ந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உச்சபட்ச மற்றும் நெருக்கமான உறவு காணப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எவ்விதமான விரிசலும் இல்லை. எந்தவொரு சக்தியாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை சீர்குலைக்க முடியாது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடுகையில் மீனவர் விவகாரம் ஒரு சிறு விடயம் மட்டுமேயாகும் என்று நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டு மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போதைய மீனவர் விவகாரங்கள் தேர்தல் சூழ்ச்சியாகவும் இருக்கலாம். தமிழகத்தின் அரசியல் குழப்பகரமான நிலைமைகளை கொண்டதாகும். அங்கிருந்து மத்திய அரசுக்கு செல்கின்ற அழுத்தங்கள் குறித்தும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். யுத்தத்தின்போது சுவிசேஷமான பங்களிப்பை இந்தியா எமக்கு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உச்சபட்ச நெருக்கமான உறவு காணப்படுகின்றது. எந்தவொரு சக்தியாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை சீர்குலைக்க முடியாது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் மீனவர் விடயம் தொடர்பில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்கின்றோம். அப்படி பார்க்கும்போது ஜப்பான் கடலில் வேறு நாடுகளும் அவுஸ்திரேலிய கடலில் வேறு நாடுகளும் மீன்பிடிக்கின்றன. அவை வெளிவருவதில்லை. ஆனால் இலங்கை இந்திய மீனவர் விவகாரம் உடனே வெளிவந்துவிடும். கடலில் எல்லையை நிர்ணயிப்பது என்பது இலகுவான விடயமல்ல. அவ்வாறு எல்லை நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றை பேணுவது கடினமாகும்.
எனவே இந்த மீனவர் விவகாரத்தை நாங்கள் சுமுகமாக தீர்த்துக்கொள்வோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுடன் ஒப்பிடுகையில் மீனவர் விவகாரம் ஒரு சிறு விடயம் மட்டுமேயாகும். அதனை நாங்கள் விரைவில் தீர்த்துக்கொள்வோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’