வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 பிப்ரவரி, 2011

புலிகள் ஆயுதத்தால் அடைய எண்ணியதை பேச்சுக்கள் வாயிலாகவும் வழங்க இயலாது

புலிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடைய எண்ணியதை பேச்சுக்கள் வாயிலாகவும் வழங்க முடியாது. நாட்டில் தற்பொழுது பூரண அமைதி நிலவுகின்றது. வட பகுதி மக்கள் தமது அன்றாட கடமைகளை சு த ந்திரமாக மேற்கொண்டு வருகின்றனர். அங்கு அச்சமின்றி மக்கள் நடமாடக்கூடிய சூழ்நிலை நிலவுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வட பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி, கடன் வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து நாட்டு நடப்புக்கள் தொடர்பில் நீண்ட நேரம் உரையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு கிட்டுமா? என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்: 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் உரிமைகளை இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை எனது அரசு ஏற்படுத்தியுள்ளது. இன்று வீதித் தடைகளும் சோதனை நடவடிக்கைகளும் இல்லை. மக்கள் தத்தமது சொந்தப் பிரதேசங்களிலும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலும் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடபகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை வங்கி ஊடாக ரூபா 7.5 பில்லியன் வரையில் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரத்தை விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
கூட்டமைப்புடனான பேச்சுக்கள் இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் எந்தளவு தூரம் சாதகமாக உள்ளன. பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுமா? என ஆசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இதர தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்கள் நடத்தப்படும். நாம் சகல கட்சிகளுடனும் ஒற்றுமையுடன் பேச்சுக்களை முன்னெடுக்கின்றோம். டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோருடனும் கலந்துரையாடுவோம். அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளையும் நாம் பரிசீலிப்போம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’