சவூதி அரேபியாவில் அவரது எஜமானியால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைப் பணிப்பெண்ணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
36 வயதான புஷ்பவல்லி செல்லத்துரை கொல்லப்பட்டதாக கடந்த வாரம் பிரேத அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருந்தன.
குறித்த வீட்டு எஜமானியை விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸார் தமது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
புஷ்பவல்லி செல்லத்துரை எவ்வாறு கொல்லப்பட்டாரென்று தங்களுக்கு தெரியாதென இலங்கைத் தூதரகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவர் 'அராப் நியூஸிற்கு' தெரிவித்தார். 'நாங்கள் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சவூதி அரேபிய வெளிநாட்டு அமைச்சு ஊடாக அந்த அறிக்கை பொலிஸாரால் வெளியிடப்படும்.'
கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி புஷ்பவல்லி செல்லத்துரை கொல்லப்பட்டதிலிருந்து தூதரகம் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி வருவதாக அந்த அதிகாரி கூறினார்.
'இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்'
குறித்த பணிப்பெண்ணுக்கு 6 வயதிற்கும் 13 வயதிற்கும் இடையில் 4 பிள்ளைகள் இருப்பதுடன், இவர்கள் கண்டியில் புஷ்பவல்லியின் தாயாருடன் வசித்து வருகின்றனர்;.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’