வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 பிப்ரவரி, 2011

கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட கொழும்பில் பிரமாண்ட திரைகள்

லங்கை – பாகிஸ்தானுக்கிடையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வதேச உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளிப்பதற்காக கொழும்பின் பல பகுதிகளில் பிரமாண்டமான தொலைக்காட்சித் திரைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இந்நிலையில், காலி முகத்திடல், நாடாளுமன்றத்திடல், பேலியகொடவில் உள்ள நவலோக விளையாட்டுத் திடல், மாளிகாவத்தையில் உள்ள பி.ரி.சிரிசேன திடல் ஆகிய இடங்களில் மேற்படி தொலைக்காட்சித் திரை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, குறித்த கிரிக்கெட் போட்டியை நேரடியாகப் பார்வையிடுவதற்கான சகல அனுமதி சீட்டுகளும் விற்று முடிந்துவிட்ட நிலையில் அனுமதிச் சீட்டு வாங்க முடியாமல் போனவர்கள் கிரிக்கெட் திடலைச் சுற்றி நின்று குழப்பம் விளைவிக்கக் கூடாதென்றும், சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
போட்டியின் போது பாண்ட் வாத்தியம் வாசிக்க விரும்பும் குழுக்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்பதோடு பார்வையாளர்கள், சுவரொட்டிகள், பதாதைகள் போன்றவற்றை விளையாட்டுத்திடலுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’