வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 பிப்ரவரி, 2011

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும்: பிரபா கணேசன் எம்.பி.

ரட்டை குடியுரிமை வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை குடியுரிமையை அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் புலம்பெயர்ந்த எமது தமிழ் மக்களேயாவர் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இரட்டை குடியுரிமையை இடைநிறுத்துவதற்கு எவ்வித காரணமும் இல்லை. இந்த அரசாங்கத்தின் செயல்பாடு எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது சம்பந்தமாக குடியுரிமை அதிகாரி சமிந்த பத்திராஜவை தொடர்புகொண்டபோது, அமைச்சரே இதனை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக கூறினார்.
இரட்டை குடியுரிமை மூலமாக பயன்பெறுவது நூற்றுக்கு நூறு வீதம் எமது புலம்பெயர்ந்த மக்களேயாவர். எமது புலம்பெயர்ந்த மக்களின் தலையீடு நாட்டில் இருக்கக்கூடாது என்ற ரீதியில் இப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என சந்தேகம் எழுகிறது.
யுத்த காலத்திற்கு பின் எமக்கு எதிரான இப்படியான திட்டமிட்ட சதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டை குடியுரிமையை பெற்று பொருளாதார ரீதியில் வட கிழக்கை கட்டியெழுப்ப வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். பொருளாதார ரீதியாக நாம் வளர்ச்சியடைந்தால் எவராலும் எம்மை அசைக்க முடியாது. இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின் இன வன்முறைக்கு உள்ளான சீக்கியர்கள் சற்றும் சளைத்துவிடாமல் இன்று இந்தியாவில் பொருளாதார ரீதியாக பலம் மிக்கவர்களாக திகழ்கின்றார்கள்.
இன்று அவர்களை இனவாத சக்திகள் அசைக்க முற்பட்டால் முழு இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படுமளவிற்கு நிலைமையுள்ளது.
அவர்களை போன்றே எமது வடகிழக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் இணைந்து இலங்கையில் பொருளாதார ரீதியில் பலம்மிக்கவர்களாக மாற வேண்டும்.
இதனை தடுப்பதற்காக அரசாங்கம் குறுக்கு வழியில் இறங்குவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இடம்கொடுக்கக்கூடாது என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’