வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 பிப்ரவரி, 2011

வாழ்வாதார உதவிகளிலிருந்து வாழ்வை கட்டியெழுப்புங்கள் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

டந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு உதவிகள் அரசு அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது வீடமைப்பு வீதி மின்சாரம் விவசாய உதவிகள் கடற்றொழில் உபகரணங்கள் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இவற்றிலிருந்து மக்கள் தங்களுடைய வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இன்று (31) பிற்பகல் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மக்களுக்கு கிடைக்கின்ற இவ்வாறான வாழ்வாதார உதவிகளை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி அதன் உச்ச பயன்பாட்டை பெறவேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் தவறாக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு நிகழும் சந்தர்ப்பத்தில் அது எதிர்காலத்தில் ஏனையவர்களுக்கு கிடைக்க இருக்கும் உதவிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் எனத் தெரிவித்த அவர் நெல் அறுவடை செய்யும் காலம் ஆரம்பித்து உள்ளமையால் அறுவடைக்குப் பின் நெல்லை நியாயமான விலையில் சந்தைப்படுத்தவும், போதியளவு களஞ்சியப்படுத்தி வைப்பதற்குமான எல்லா ஏற்பாடுகளும் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அரசோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ செய்துள்ளது என நான் இங்கு கூற வரவில்லை. மக்களுக்கு இன்னமும் குறைபாடுகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் எதிர்காலத்தில் எம்மால் நிச்சயம் தீர்த்து வைக்கப்படும். அதேவேளை மக்கள் எல்லாவற்றுக்கும் அரசையோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களையோ எதிர்பார்க்கக் கூடாது. கடந்த காலங்கள் போன்று உங்களின் சுயமுயற்சிகளின் மூலம் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் நிதி அனுசரணையுடன் சர்வோதயம் நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இவ் உதவித்திட்டமானது கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 148 விவசாயிகளுக்கும் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் மாயவனூர் இராமநாதபுரம் மாவடி அம்மன் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 76 பயனாளிகளுக்கும் நீர் இறைக்கும் இயந்திரம் தெளிகருவி முள்ளுக்கம்பி பூவாளி உட்பட பல விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒரு விவசாயிக்கு 47500.00 ரூபா பெறுமதியான உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலரும் கரைச்சிப் பதில் பிரதேச செயலருமான சத்தியசீலன் ஒக்ஸ்பாம் நிறுவன இணைப்பாளர் பார்த்தீபன் மற்றும் கிராம அலுவலர்கள் விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’