வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பி
ரித்தானியாவின் தெற்காசியப் பிராந்திய ஆலோசகரும் உயர்ஸ்தானியக முதலாவது செயலாளருமான டேவிட் அஷ்லி அபிவிருத்திக்கும் அரசியலுக்குமான இரண்டாம் தரச் செயலர் டொமினிக் வில்லியம்ஸ் மற்றும் சுவிஸ் தூதரக முதலாம் தர செயலர் சஷ்பா முலர் ஆகியோர் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் வடபகுதி நிலைமைகளையும் கேட்டறிந்தனர். குறிப்பாக யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் வடபகுதி மக்களின் மீள்குடியேற்றம் வாழ்க்கைத்தரம் போன்ற விடயங்களை கேட்டறிந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் யாழ். குடாநாடு உள்ளிட்ட வடபகுதி நிலைமைகளை எடுத்துக் கூறியதுடன் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழ்நிலையில் சமாதானம் அபிவிருத்தி அரசியல் தீர்வு என்பன சமகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார். இதன்பிரகாரம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் வெளிநாட்டு அரசாங்கங்களினதும் உதவிகள் முதலீடுகள் ஆலோசனைகள் என்பன முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற - முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டு நிலவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமாரும் உடனிருந்தார்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’