வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன் ஐ.தே.க.யின் புதிய தலைமை தெரிவு: ஹலிம்

திர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன் புதிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உருவாகும் என கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐ.தே.க. உப தலைவருமான எம்.எச்.ஏ. ஹலிம் தெரிவித்தார்
.இன்று கண்டி மாவட்டத்தில் உள்ள அக்குறணை, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய ஆகிய பிரதேச சபைகளுக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்ற ஐ.தே.க. வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஒன்றையே. இதனை நன்றாக புரிந்து கொண்ட ஐ.தே.க. உயர் பீடம் கடந்த தேசிய மகா நாட்டிலே புதிய யாப்பை ஏகமனதாக நிரைவேற்றியது.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் 12 ம் திகதிக்கு முன் பதிய தலைவர்கள் நியமிக்க வேண்டும். எனவே சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தை கொண்ட ஐ.தே.க. விரைவில் உருவாகும் என்றார்.
இம்முறை நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாகும். இன்று மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகின்றது.
எனவே மக்கள் அரசியல் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றனர். இத் தேர்தல் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாவிட்டாலும் அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கலாம். என தெரிவித்தார்.
இக் கூட்டத்திற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எம். ஷாபி , எஸ்.எம்.பீ.டி. அல்விஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’