இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதில் நீதியானதும் ஜனநாயக ரீதியிலானதுமான இலங்கை பற்றி நம்பிக்கையோடு இருப்பதாகவும் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்பை இதன்போது அவர் நினைவுகூர்ந்தார்.
'இந்த உறவை நாம் தொடர விரும்புகின்றோம். சகல பிரஜைகளுக்கும் அமைதியான செழிப்பான ஜனநாயகமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் நல்லிணக்கத்தை கொண்டுவர உதவுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்' என ஹிலாரி கிளின்டன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டிருந்தது. யுத்த நடவடிக்ககைளின்போது மனித உரிமை மீறப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’