வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாசக்கட்டடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

டமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாச தலைமைச் செயலக கட்டடம் இன்றைய தினம் (20) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
போரூட் மற்றும் ஜீ.ரீ.சற். ஆகிய சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின் நிதியுதவியுடன் தாளையடியில் அமைக்கப்பட்ட மேற்படி கட்டடமானது நேற்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டபோது பெருமளவிலானோர் அங்கு சமூகமளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கடற்றொழில் சமாச தலைமைப்பணிமனை பெயர்ப்பலகையினையும் அமைச்சரவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கட்டடத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சமாசத் தலைவர் கொ.அ.ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. சமாசத்தின் உப தலைவர் கி.சிவசுவாமியின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் கௌரவ விருந்தினர் உரையினை வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் ந.திருலிங்கநாதனும் சிறப்பு விருந்தினர் உரையினை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அருந்தவநாதனும் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார். இயற்கை அழிவுகளினாலும் கடந்தகால ஆயுத வன்முறையினாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தை அனைவரும் ஒன்றுபட்டு கட்டியெழுப்புவோம் எனத்தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்கான ஆரம்ப படிகளில் ஒன்றே இப்பணிமனைத் திறப்புவிழா எனத்தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன் வடமராட்சி கிழக்கு ஈபிடிபி பொறுப்பாளர் சதீஸ் உட்பட கடற்றொழில்சங்க தலைவர்கள் அங்கத்தவர்கள் அவர்தம் குடும்பத்தினர் எனப் பெருமளவிலானோர் பங்குகொண்டனர்.

கட்டட திறப்பு விழாவினைத் தொடர்ந்து கரையோர மீன்பிடிக்கென யு.என்.டி.பி அமைப்பானது அன்பளிப்பு செய்த மூன்று கட்டுமரங்களை தெரிவு செய்யப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’