வ
ரலாற்றில் முதல்தடவையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சி காரணமாக தமிழ் பொலிஸாருக்கென தனியான பயிற்சி முடித்து வெளியேறிய ஒருதொகுதியினர் அமைச்சரவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தமிழ்மொழி மூலமான பயிற்சியினை முடித்துக் கொண்டவர்களில் ஒருதொகுதியினர் இன்றுகாலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரவர்களின் பணிமனைக்கு வருகை தந்தே சந்திப்பினை மேற்கொண்டனர். அவர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ் சேவையினை சமுதாயத்திற்கான சேவையாக பார்க்கவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். மேலும் பொலிஸ் சேவையினை தொழிலாக கருதாமல் எமது சமூகத்திற்கான கடமையாக கருதி பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே தாம் பொலிஸ் சேவையில் உள்வாங்கப்பட்டு தனித்தமிழிலேயே தமது பயிற்சிகளை முடித்து வெளியேறக் கூடியதாக இருந்ததாக நன்றி தெரிவித்த மேற்படி பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டோர் இவ்வாய்ப்பினை தம்மைப்போன்ற மேலும் இளைஞர் யுவதிகளுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’