யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் தமக்கென ஓர் கரப்பந்தாட்ட உள்ளக அரங்கொன்றை நிர்மாணித்துத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இவ்வேண்டுகோளை அடுத்து கரப்பந்தாட்ட உள்ளக அரங்கு நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட மைதானப்பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றுமாலை நேரடியாக விஜயம் செய்தார். யாழ். சுண்டிற்குளி றக்கா வீதியிலுள்ள மாநகர சபைக்கு உரித்தான மைதானப்பகுதிக்கு அமைச்சரவர்கள் சென்றபோது யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் மாநகரசபை அதிகாரிகளும் உடனிருந்தனர். மைதானத்தின் நிலைமை மற்றும் சுற்றாடல் பகுதிகளை பார்வையிட்ட அமைச்சரவர்கள் ஏற்கனவே அப்பகுதியில் இயங்கும் சனசமூக நிலையம் மற்றும் அப்பகுதி விளையாட்டுக் கழகம் என்பனவற்றிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உள்ளக அரங்கு நிர்மாணிக்கப்பட வேண்டிய நிலைமை குறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். இச்சமயம் யாழ்.கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஏகாம்பரம் செயலாளர் மனோகரன் மற்றும் சம்மேளன நிர்வாக உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
கரப்பந்தாட்ட உள்ளக அரங்கொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக உரிய அறிக்கையொன்றை தருமாறு யாழ். மாநகர முதல்வரைப் பணித்த அமைச்சரவர்கள் விரைவிலேயே சாதகமான பதிலை தாம் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இச்சமயம் விளையாட்டுத்துறைக்கு குறிப்பாக கடந்த காலத்தில் யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட கழகங்களுக்கும் சம்மேளனத்திற்கும் நிதியுதவியாகவும் பொருள் உதவிகளாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத்தந்த அனைத்து உதவிகளையும் நினைவுகூர்ந்த சம்மேளன நிர்வாகிகள் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’