க கடும் மழை வெள்ளம் காரணமாக இதுவரையில் 9 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பலியாகியும் உள்ளனர்
.ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உதவிகள் "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவே உள்ளது'' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. குற்றம்சாட்டினார்.
முழு சொத்தையும் இழந்து முகாம்களில் உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 70 ரூபாவை வழங்வது முறையா? இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட செயலணியையோ அல்லது அமைச்சுக்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியையோ அரசாங்கம் இதுவரையில் அமைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்ககிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்குள் மூழ்கியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக அமையவில்லை. கடும் மழை, வெள்ளம் காரணமாக 9 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு தமது உடமைகளை இழந்து பள்ளிக் கூடங்களிலும் மத வழிப்பாட்டு ஸ்தலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். அரசாங்கம் இவர்களுக்கு உதவுமாறு மாகாண சபைகளுக்கு அறிவித்து வருகின்றது.
பெரும்பாலான மாகாணச் சபைகளை கொண்டு நடத்தவே போதுமான நிதியில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாரியஅனர்த்தம் ஒன்றின்போது எவ்வாறு மக்களுக்கு உதவ முடியும்.
பொறுப்புள்ள அரசாங்கம் என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விசேட செயலணி ஒன்றை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது பழைய இடர் முகாமைத்துவ கொள்கையின் அடிப்படையில் 70 ரூபா பாதிக்கப்பட்டவருக்கு வழங்குவது பொறுப்பற்ற தன்மையாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர் மற்றும் உடைகள் இன்றி பெரும் அவஸ்தைப்படுகின்றார்கள். இவற்றை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கண்டியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஐ.தே.க. வின் விசேட குழு மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரணம் வழங்குவதிலும் ஈடுபட்டது. எனவே அரசாங்கம் காலம் கடத்தாது மக்கள் பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’