வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 ஜனவரி, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதியின் கல்விச் செயற்பாட்டிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார் - வடமாகாண ஆளுநர்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதியின் கல்விச் செயற்பாட்டிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பரிசளிப்பு விழாவும் ஸ்தாபக தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொள்வதாக இருந்த போதிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் இருப்பினும் நிகழ்விற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் வடபகுதியில் கல்வித்துறைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதியின் கல்விச் செயற்பாட்டிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன் அவரது வழிகாட்டுதலின் பிரகாரம் இந்தப் பாடசாலைக்கென கணனிக் கூடம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வியமைச்சால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 110 பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்று என்பதுடன் தொடர்ச்சியாகவும் கல்விச் செயற்பாட்டிற்கு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மாகாண சபையூடாகவும் மேற்கொள்ள உள்ள அதேவேளை கொழும்பிலிருந்து ஒரு தொகுதி நூல்களையும் தருவித்துள்ளோம். இவற்றைக் கொண்டு இப்பாடசாலைக்கென சிறந்த நூலகத்தை உருவாக்க வேண்டும்.

இப்பாடசாலையின் எதிர்கால வளர்ச்சி மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ள நிலையில் எல்லோரும் பொறுப்புணர்ந்து பங்காற்ற வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக புதிதாக அமைக்கப்பட்ட கணனிக் கூடத்திற்கான பெயர்ப்பலகையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் ஆகியோரால் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்ததுடன் கணனிக் கூடத்தினை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து பிரதான மண்டபத்திற்கான நினைவுக் கல்வினை திரைநீக்கம் செய்து வைத்த அதிதிகள் கல்விச் சமூகத்தால் பிரதான அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பாடசாலை அதிபர் கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில்,

மீண்டும் இந்தப் பாடசாலையை இயங்க வைக்க வேண்டுமென கல்விச் சமூகத்தால் என்னிடம் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கேற்ப ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோருடன் கலந்துரையாடியதன் பிரகாரம் சொந்த இடத்தில் மீண்டும் இங்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 29.09.2010 அன்று சம்பிரதாயப் பூர்வமாக இந்தப் பாடசாலை மீளவும் திறந்து வைக்கப்பட்ட போதிலும் சில அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் தொடர்ச்சியாக இனங்காண்பதில் பல இடர்பாடுகள் இருந்ததாகவும் தற்போது கட்டிடங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் புதுப்பொலிவுடன் பாடசாலை இம்மாதம் இயங்கி வருவதாகவும் அமைச்சர் அவர்கள் அங்கு சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து அதிகளால் பாடசாலைக்கென தொலைக்காட்சிப் பெட்டி பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒரு தொகுதி நூல்கள் நூலக ஆசிரியையிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொதுநிதி முகாமைத்துறை நிபுணர் சந்திரகுமாரன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் வடமாகாண கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.



















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’