வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 ஜனவரி, 2011

கடந்த வாரம் சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல்



கடந்த வாரம் சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குறிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் முதலில் உண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டின் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மனிதாவிமான நடவடிக்கைகளுக்கு எதிராக செய்யப்பட்ட காரியங்கள் ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிறப்பாக மக்கள் காணாமல் போன விடயம், சட்டத்திற்கு மாறாக மக்கள் கொல்லப்பட்ட விடயங்கள் ,சட்டத்திற்கு முன்னாள் மக்கள் குற்றவாழிகள் என அறியப்பட்டவர்கள்,வேறு விதமாக பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களை கொண்டு போய் சித்திர வதை செய்தவை,மக்கள் வாழும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டமை, கட்டிடங்கள், மருத்துவமனை போன்றவற்றை அழித்தொழித்த உண்மைகளை அறியப்பட வேண்டும்.உண்மைகளை மறைப்பதினால் எவ்விதமான பயனும் இல்லை. உண்மைகளை எடுத்து அவை மக்கள் முன்னால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட் வேண்டும் என தெரிவித்தார்.யார் இதை செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படத்தப்படும் போதே மக்கள் மத்தியில் சமரசம் செய்ய முடியும் என தெரிவித்தார். அதிவணக்கத்திற்குறிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த தவறை மறைத்ததின் நோக்கம் என்ன ?புலிகள் தற்பொழுது இல்லை என்ற கூறிய ஆயர் புலிகளின் தவறையும் தமிழ் மக்கள் நன்கு அறிய இனியும் புலி என்றும் புலி பினாமி என்றும் அமைப்புக்கள் உருவாக்கி தமிழ் மக்களின் நின்மதியான வாழ்க்கையையும் சிதைக்காமல் இருக்க புலிகள் செய்த தவறையும் எடுத்துக் கூறுவதன் மூலமாக தமிழ் மக்கள் இனியும் இப்படியான அமைப்புக்களுக்கு துணை போகாமல் இருக்க உதவியாக இருக்கும் அல்லவா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’