வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 ஜனவரி, 2011

கிடைக்கின்ற உதவிகளை வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஓர் ஆரம்பமாக மக்கள் பயன்படுத்த வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்

ரச அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் தற்போது கிடைக்கின்ற உதவிகளை மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற ஓர் ஆரம்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (25) பரந்தனில் உள்ள கரைச்சி வடக்கு கடற்றொழில் சங்கங்களின் சமாச அலுவலகத்தில் இடம்பெற்ற பிரெக்டிக்கல் அக்ஷன் நிறுவனத்தின் உதவியுடன் உமையாள்புரம் பரந்தன் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தொவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வாறான வாழ்வாதார உதவிகளை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட அவர் கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவிகளை எதிர்காலத்தில் நாம் விஸ்தரிக்கவுள்ளோம் எனவும் இதுதொடர்பாக உரிய அமைச்சருடன் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் வைத்து பேசியுள்ளதாகவும் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்கள் முடிந்தவுடன் அமைச்சர் அவர்களை இங்கு அழைத்து வந்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் அத்தோடு இரணைமடு நன்னீர் தொடர்பாகவும் அமைச்சருடன் பேசி தீர்வுகாணப்படும் என்றும் தெரிவித்தார்.
பரந்தன் உமையாள்புரம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 பயனாளிகளுக்கு 1 25 000 ரூபா பெறுமதியான படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கரைச்சி வடக்கு கற்றொழிலாளர்களின் சமாச பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரெக்டிக்கல் அக்ஷன் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் செல்வி கலாநிதி விசாக்கா கிதல்லகே கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் வைரமுத்து கூட்டுறவு உதவி ஆணiயாளர் கணேசு கடற்றொழிலாளர் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி 58 573 படைப்பிரிவின் பொறுப்பதிகாரிகள் கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் நந்தகுமார் மற்றும் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’