(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)
யுத்தத்தில் கிடைத்த இராணுவ வெற்றியினால் தேசிய ஐக்கியம் தன்பாட்டிலேயே வந்துவிடும் என்பதற்கில்லை. தனித்துப்போய்விட்ட தமிழர்களுக்கு ஏற்புடைய ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதனால் போருக்குக் காரணமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது அவசியமாகும். இலங்கையின் நீண்டகாலமாக துன்பப்படும் தமிழ் மக்களின் உள்ளத்தையும் இதயத்தையும் கவர்வது தமிழீல விடுதலைப்புலிகள் வசமிருந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவதிலும் பார்க்க கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பூரிக்க வைக்கும் இராணுவ வெற்றியின் பின்னும் நியாயமான மனத்தாங்கல்களுக்கு தீர்வுகாணும் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும் அர்த்த புஷ்டியான அரசியல்; முன்னெடுப்புகள் தொடர்பில், ராஜபக்ஷ அரசாங்கம் கவலை தரும்வகையில் செய்யலின்மையை காட்டியுள்ளது. மறுபக்கத்தில் தேசிய கீதம் போன்ற கருத்து மோதல்கள் புதிய பிரச்சினைகளை தோற்றுவித்து ஏற்கெனவே நொந்து போன உள்ளங்களை மேலும் நோகடிக்கின்றன.
இன நல்லிணக்கம், ஒற்றுமை என்பவை மீது முக்கிய கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்கெனவே உள்ள ஏற்பாட்டின் மீது கைவைத்து மக்களை மேலும் அல்லல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகள் காணப்படுகின்றன. தமிழ் வடிவம் ஒழிக்கப்பட்டு சிங்களம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென சிங்கள கடுங்கோட்பாட்டளர்கள் கோருகின்றனர். சிலர் தமிழில் தேசிய கீதம் பாடுவது சட்டவிரோதமானது எனக் கூறும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தின் உத்தியோகபூர்வ வடிவம் சிங்களத்தில் உள்ளது. இதுவே அசல் வடிவம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆனந்த சமரகோனின் 'நமோ நமோ மாதா' தேசிய கீதமாக முறையாக ஏற்கப்பட்ட காலத்திலிருந்தும் தமிழ் வடிவமும் இருந்து வருகிறது.
கொழும்பு மற்றும் சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் சிங்களவடிவம் பாடப்பட்ட வேளையில் தமிழ்பெரும்பான்மை பகுதிகளிலும் தமிழ்மொழி மூல பாடசாலைகளிலும் தமிழ்வடிவம் பாடப்பட்டது. தமிழுக்கும் எந்த வித உத்தியோகபூர்வ அந்தஸ்துமட் இல்லாத, சிங்களம் மட்டுமே தனியொரு உத்தியோகபூர்வ மொழியாக இருந்த காலத்தில் இப்படியான அரவனைத்து செல்லும்போக்கு காணப்பட்டது.
கொழும்பு மற்றும் பெரும்பான்மை மாகாணங்களில் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் சிங்கள வடிவம் பாடப்பட்ட வேளையில் தமிழ் பெரும்பான்மை பகுதிகளிலும் தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழுக்கு எவ்வித உத்தியோகபூர்வ அந்தஸ்தும் இல்லாத சிங்களம் மட்டுமே தனியொரு உத்தியோகபூர்வ மொழியாக இருந்த காலத்தில் இப்படியான அரவணைத்துச் செல்லும் போக்கு காணப்பட்டது.
அரசியலமைப்பு
1978 அரசியலமைப்பில் தமிழுக்கு தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதேயன்றி உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதே யாப்பின் சரத்து 7 ஊடாக சிங்களத்திலிருந்த தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இருப்பினும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு 7 ஆவது சரத்துக்கான 3 ஆவது அட்டவணையின் மூலமும் அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1987 இன் யாப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் சி;ங்கள மொழியோடு தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக உயர்த்தப்பட்டது. 1988 இல் கொண்டு வரப்பட்ட 16 ஆவது திருத்தத்தின் ஊடாக உத்தியோகபூர்வ மொழியென்ற வகையில் நிர்வாக, சட்ட துறையிகளில் மேலும் விரிவாக்கம் பெற்றது.
தமிழ்மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாதிருந்தபோது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. ஆனால் தமிழ்மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளபோது தமிலுள்ள தேசிய கீதத்தை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முரண்நகையான உள்ளன.
இப்போதைய நிலையை தொடரவேண்டும் என்பதற்கு இன்னுமொரு ஆணித்தரமான காரணம் உண்டு. தமிழி;ல் தேசிய கீத்ததை பாடவிரும்பும் தமிழர்கள் பிரிவினை வாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ அல்லர். அண்மையில் அரச கட்டுப்பாட்டு ஊடகமொன்றில் கட்டுரையில் புலிசார்பு புலம் பெயர்ந்தோர், தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டுமென கூறுவதாக சொல்லப்பட்டிரு;தது. இந்த முட்டாள்தனமான கருத்தைப்போல உண்மைக்கு அப்பாற்பட்ட விடயம் எதுவும் இருக்க முடியாது. இலங்கையில் வாழ்கின்ற ஆரவாரப்படாத தமிழ் பெரும்பான்மையினர் தேசிய கீதத்தை தமிழில் பாட விரும்புவது, அவர்கள் இலங்கையில் வாழ்கின்ற ஆரவாரப்படாத தமிழ் பெரும்பான்மை தேசிய கீதத்தை தமிழில் பாட விரும்புவது, அவர்கள் இலங்கையுடன் தம்மை அடையாளப்படுத்தவும், அவர்கள் இலங்கைக்கு உரித்தானவர்கள் என்பதாலும் ஆகும்.
இவர்கள் கேட்பது புதிய உரிமையல்ல. இப்போதும் இருக்கின்ற, இருந்துவந்த உரிமையின் தொடர்ச்சியையே அவர்கள் கேட்கின்றனர். சிங்களத்திலுள்ள தேசிய கீதத்துக்கு முதலிடம் கொடுத்தாலும், பொருத்தமான இயலுமான போதெல்லாம், இடங்களிலெல்லாம் இதை இவர்கள் தமிழில் பாட விரும்புகின்றனர்.
தமிழில் கீதங்கள்
தமிழ் அரசியல் சமூகத்தில் தேசியகீதம் பாடும் நடைமுறைஇழந்து போய் 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்பதை நாம் மறக்கலாகாது. சமஷ்டி கட்சியும் பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அரசியல் கூட்டங்களில் பிரதியீடான 'தமிழ் அரசு' கீதங்களை பாடும் ஒழுங்கை செய்தன. குறைந்த பட்சம் மூன்று வௌ;வேறு கீதங்கள் பாடப்பட்டன. அதில் ஒன்று பரமஹம்ஸதாசன் எழுதிய 'வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க என்றும் வாழ்கவே.' அடுத்தது, திருக்கோவில் அரியநாயகம் எழுதிய- எங்கள் ஈழத் தமிழ் திருநாடு, கலை வாழும் பொன்னாடு'. மூன்றாவது காசியானந்தன் எழுதிய 'வாழியவே வாழியவே, எங்கள் தங்க மாமணி தமிழ் ஈழம்,
தமிழீழ தேசிய கீதத்தின் இந்த மூன்று வடிவங்களும் அதிதீவிர தேசியமும் பிரிவினைகவாதமும் உச்சத்தில் காணப்பட்ட கடந்த தசாப்தங்களில் பாடப்பட்டன. இவை தமிழ்த்தாயை போற்றிப்பாடப்பட்ட தமிழ் பாடல்களிலிருந்து வித்தியாசமானவை. இந்த 'தமிழ் தாய் வாழ்த்து' சகல தமிழ் கலாசார நிகழ்வுகளிலும் கட்டாயமாக இருந்தது.
தமிழ்மொழியை தமிழ்த் தாயாக உருவகிப்பதும், போற்றிப்பாடுவதும் தமிழர் அல்லாதவர்களால் விளங்கிக்கொள்ள கஷ்டாமனதாகும். வழமையாக சுப்பிரமணிய பாரதி பாடிய 'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற கீதமும் பாரதிதாசன் பாடிய 'தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற கீதமும் 'தமிழ் தாயை' கனம்பண்ணும் வகையில் பாடப்படுகின்றன.
பொதுவாக தமிழ் ஆயுதப்போரட்டாத்தினதும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளினதும் எழுச்சியுடன் வடக்கு, கிழக்கில் தமிழில் தேசிய கீதத்தைப்பாடும் நடைமுறை குறையத் தொடங்கியது. அநேகமாக உத்யோகபூர்வ நிகழ்;வுகளில் இசை மட்டுமே போடப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ. வடக்கு கிழக்கில் சில குறித்த இடங்களில் ஆட்புல கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியபின் இலங்கையின்; தேசியகீதம் முற்றுமுழுதாக கைவிடப்பட்டது.
எல்.ரீ.ரீ.ஈ. பிரதியீட்டு தமிழ்ஈழ கீதத்தை ஆக்கிக்கொள்ளவில்லை. பதிலாக அவர்கள் புலிக்கொடியின் புகழ் பாடினர். புலிக்கொடி, தமிழீமாக அல்லது தமிழ் தேசியக்கொடியாக உருவாக்கப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் அரசவை கவிஞரான புதுவை இரத்தினதுரை 'ஏறுதுபார் கொடி ஏறுதுபார்' என்னும் பாடலை எழுதினார். இது பல கொண்டாட்டங்களில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்த புலிக்கொடியேற்ற நிகழ்வுகளின்போது பாடப்பட்டது.
எல்.ரீ.ரீ.ஈ.யிடமிருந்து இலங்கையின் ஆயுதப்படைகள் ஆள்புலத்தை மீண்டும் கைப்பற்றத் தொடங்கியபின் கொழும்பு அரசு அதன் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் மீளப்பெற்றுக்கொண்டது. இது தவிர்க்க முடியாத ஆனால் விரசமான ஒரு இராணுவத்தின் இருப்புக்கு இட்டுச்சென்றது. இதன் தொடர்ச்சியான வடக்கு கிழக்கில் தேசியக்கொடி பறந்தது. தேசிய கீதமும் கூடவே இசைந்து வந்தது.
தேவனந்தா
ஆரம்பத்தில் தேசிய கீதம் வடக்கில் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்பட்டது. அல்லது போடப்பட்டது. ஆனால் ஒரேயொரு இலங்கைத் தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் விடா முயற்சி காரணமாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படலாயிற்று.
இப்போது யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் பாடப்படுகின்ற ஒரு கலப்பு நிலைவரம் காணப்படுகிறது.
இந்த பின்னணியில்தான் இப்போதைய நெருக்கடி பார்க்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்கள் பல தசாப்தங்களாக தனிமைப்பட்டிருந்தப் பின் இலங்கையில் தமிழர்கள் மீண்டும் பிரதான நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் தமது இலங்கையர் என்ற அடையாளத்தை வலியுறுத்துகின்றனர்.
அதே சமயம் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதன் மூலம் தமிழர்கள் தமது இன அடையாளத்தைப் பேணவும் விரும்புகின்றனர். இலங்கையராகவும் அதே சமயம் தமிழராகவும் இருப்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் தமிழில் தேசிய கீதம் பாடுவதாகும்.
ஆனால், கவலை தரும் வகையில் இந்த அடிப்படையான, சாதாரண உண்மை சில தொடர்புடைய பகுதிகளில் விளங்கிக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தமிழில் தேசிய கீதம் பாடும் விடயத்தில் விரும்பத்தகாத, தேவையில்லாத ஒரு பிரச்சினை உருவாகி வருகின்றது.
தமிழில் தேசிய கீதம் பாடும் நடைமுறையை ஒழித்துக்கட்டுதவற்தகான பிரச்சாரம் ஒன்று பெரும்பான்மை கடும்கோட்பாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஆயினும் நிதானம் காணப்படுவதற்கான அடையாளங்களும் தெரிகின்றன. எமது தேசிய கீதத்தின் வளர்ச்சி, படிமலர்வு என்பவற்றை மீள்பார்வைக்கு உட்படுத்தும்போது, ஆரம்பத்திலிருந்தே கருத்துமோதலுக்குள் அது சிக்குண்டு கிடந்ததை காணக்கூடியதாக உள்ளது.
தேசியகீதம் என்ற எண்ணக்கரு பிரித்தானியர்களால் அப்போதிருந்த சிலோனுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நவீன சிலோன் தேசம் கூட ஒரு காலனித்துவ உருவாக்கமே. பல்வேறு ஆள்புலங்களை ஒரு தனி அலகாக தமது ஆட்சியின் கீழ் ஒன்றாக்கி நாட்டுக்கு ஒரு வகை நிர்வாகத்தை கொண்டுவந்தவர்கள் பிரித்தானியர்களே.
' கோட் சேவ் த கிங் ஃ குயின்'' 1745 இல் பிரித்தானிய தேசிய கீதம் ஆயிற்று. இது நாடாளுமன்ற சட்டத்தின்படியன்றி பிரித்தானிய பேரரசு மேலும் மேலும் விரிந்து சென்றபோத ' பிரித்தானியரால் ஆளப்பட்ட சகல நாடுகளிலும் ஆள் புலங்களிலும் 'கோட் சேவ் த கிங் ஃகுயின்' தேசிய கீதமாக பாடப்பட்டது.
சிலோனும் விதிவிலக்காக இருக்கவில்லை. விக்டோரியா ராணியின் ஆட்சிக் காலத்தில் கோட் சேவ் த கிங் ஃகுயின், நடைமுறையில் சிலோனினதும் தேசிய கீதமாயிற்று. இது 20 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இந்திய தேசிய காங்கிரஸை பின்பற்றி 1919 இல் அமைக்கப்பட்ட சிலோன் தேசிய காங்கிரஸ் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில், டட்லி ஷெல்டன் சேனநாயக்கவும் ஜூனியஸ் றிச்சர்ட் ஜயவர்த்தனவும் அதன் இணைச் செயலாளர்களாக வந்தபின் புதிய உத்வேகம் பெற்றது.
சிலோன் தேசிய காங்கிரஸ் சிலோனுக்கான ஒரு தேசிய கீதத்தை வைத்துக்கொள்ள தீர்மானித்தது. இதன்படி ஒரு கீதமொன்று டி.எஸ்.முனசிங்க என்பவரால் இயற்றப்பட்டது. இதற்கு சேர்.ஜேம்ஸ்.பீரிஸின் மகனான புகழ்பெற்ற தெவர் சூரியசேன இசை அமைத்தார். இது 1943 இல் சிலோன் தேசிய காங்கிரஸின் அமர்வுகளின்போடப்பட்டது. ஆனால் 6ஆவது ஜோர்ஜின் ஆட்சியின்போது ' கோட் சேவ் த கிங்' ஆதிக்கம் பெற்றது.
போட்டி
சிலோன் டொமினியன் அந்தஸ்தை பெற்றப்போதும் பின்னர் சுதந்திரம் பெற்ற போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கீதம் இருக்கவில்லை. லங்கா கந்தர்வ சபாவிடம் ஒரு தேசிய கீதத்தை ஆக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கென ஒரு போட்டி ஒழுங்குபடுத்தப்பட்டது. பொருத்தமான கீதத்தை தெரியும் கடமை 'சபா'' வினால் அமைக்கப்பட்ட ஒரு குழுமத்திடம் கொடுக்கப்பட்டது.
இந்த குழுமத்தில் எஸ்.எல்.பி. கபுகொட்டு, டாக்டர் ஓ.எச்.டி விஜேசேகர, லயனல் எதிரிசிங்க, முதலியார் விஜேசேகர,லயனல் எதிரிசிங்க, முதலியார் ஈ.ஏ.அபேசேகர, எல்.எல்.கே. குணதுங்க, பீபீ. இலங்கசிங்க ஆகியோர் இருந்தனர். பின்னர் தெரிவுக் குழுமத்தில் இருந்த இருவர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டபோது சர்ச்சைக் கிளம்பியது.
பீபி இலங்கசிங்க எழுதி, லயனல் எதிரிசிங்க இசையமைத்த பாடல் புதிய தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. இது ' ஸ்ரீலங்கா மாதா, பலயஸ மஹிம, ஜய ஜய' எனத் தொடங்கி – 'ஜய ஜய தத நங்கா, ஸ்ரீலங்கா மாதா' என முடிந்தது.
தெரிவுக்குழுவின் இரண்டு அங்கத்தவர்களால் சமர்பிக்கப்பட்ட பாடல் தேசிய கீத போட்டியில் வென்றது என்ற விடயம் பரந்தளவில் கசப்புணர்வையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது. இது வெட்கக் கேடான நீதியீனமாக கருதப்பட்டது.
இலங்கசிங்க – எதிரிசிங்க ஜோடியால் ஆக்கப்பட்ட பாடல், சுதந்திர தினத்தன்று காலை ரேடியோ சிலோனினால் தேசிய கீதம் என்ற வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்புகளின் காரணமாக உத்தியோக ரீதியான சுதந்திரதின கொண்டாட்டங்களில் இது பாடப்படவில்லை.
இந்தப் பாடல் நேர்த்தியானதாகவும், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தபோதும் இதை தேசிய கீதமாக தெரிந்ததில் பக்கச்சார்பு இருந்தது என்ற அபிப்பிராயமே விமர்சனத்தையும் எதிர்ப்பையும் கிளப்பிவிட்டது. எனவே தேசியகீத போட்டியில் வெற்றி கீதம் மக்களை பொறுத்தவரையில் ஏற்க முடியாத ஒன்றாகியது. இதனால் அதன் மதிப்பு குறையலாயிற்று. அதே சமயம், தேசிய கீதமாகலாம் என்ற அளவுக்கு சிந்திக்கும் வகையில் ஒரு பாடலொன்று மக்களின் உள்ளத்தை கவரத் தொடங்கியது. இந்தப்பாடல்தான் பிரபலமான கவிஞரும் சித்தர கலைஞருமாகிய ஆனந்த சமரக்கோனினால் எழுதப்பட்ட பிரபலமான 'நமோ நமோ மாதா' ஆகும்.
சமரக்கோன்
ஆனந்த சமரக்கோன் ஜனவரி 13, 1911 இல் பாதுக்க பிரதேசத்தில், வட்டறேக்காவுக்கு அண்மையில் உள்ள சிறிய கிராமமான லியன்வலவில் பிறந்தார். இவரது பெற்றோர்களான சாமுவேல் சமரகோன், டொமின்கா பீரிஸ் ஆகியோர் வி;;ல்பிரட் என ஞானஸ்தானம் வழங்கப்பட்டார். இவரது முழுப்பெயர் எகடகஹே ஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரக்கோன். அப்போது அவரது பெயரில் ஆனந்த இருக்கவில்லை. சிறுபராயத்திலும் இருபதுகளின் ஆரம்பத்திலும் அவர் ஜோர்ஜ் வில்பிரட் என அறியப்பட்டார்.
இளவயதில் ஜோர்ஜ் வில்பிரட் கோட்டே கிறிஸ்தவ கல்லூரியில் ( இப்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர ம.ம.வி) படித்தார். 1934 இல் கிறிஸ்தவ கல்லூரியில் சங்கீத, சித்திர ஆசிரியராக இணைந்தார். ரவீந்திராநாத் தாகூரினால் உந்தப்பட்ட ஜோர்ஜ் வில்பிரட், வங்காளத்திலிருந்த தாகூரின் நுண்கலை கல்லூரியான சாந்திநிகேதினில் சேர்ந்தார்.
இவர் 1936 இல் சாந்தி நிகேதனில் சேர்ந்தார். இங்கு இவர் பிரபல வங்காள சித்திர கலைஞரான நந்தலாலால் போஷிடம் சித்திரத்தையும், சாந்திதேவி கோஷிடம் சங்கீதத்தையும் கற்றார். இவர் பாடநெறியை பூரத்தி செய்யாமலே 1937 இல் இலங்கைக்கு திரும்பிவந்து மீண்டும் ஆசிரியரானார். இப்போது இவர் ஆனந்த சமரக்கோன் என அழைக்கப்பட்டார். 1940 இல் இவர் காலி மஹிந்த கல்லூரியில் ஆசிரியராகினார்.
'நமோ நமோ' தேசிய கீதமாக பயன்படும் என்ற நோக்கில் முதலில் எழுதப்படவில்லை. இதன் தோற்றம் சுவாரஷ்யமானது. சாந்திநிகேதனில் அவரது கல்வி நின்றுவிட்டபோதும், சமரக்கோன் அடிக்கடி இந்தியாவுக்கு போனார்.
ஒரு தடவை அவர், அவரது தனது முதலாவது விமான பயணத்தில் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழே பார்த்த அவர் நாட்டின் காட்சிகளை கண்டு ஆனந்தமும் பரவசமும் அடைந்தார். விமானம் தரையிறங்கியதும் உடனேயே தனது மனதில் வந்த சில சொற்களையும் வசனங்களையும் குறித்துக்கொண்டார்.
1940 ஒக்டோபர் 20 ஆம் திகதி இவர் பாதுக்கையில் தனது மூதாதையர் வீட்டில் இருந்தார். நித்திரை வராத அவர் கட்டிலில் புரண்டு புரண்டுக் கொண்டிருந்தார். 10 மணியளவில் அவர் திடீரென எழும்பி, இந்தியாவிலிருந்து வான் வழியாக நாடு திரும்பியவுடன் எழுதிய குறிப்புகளை பயன்படுத்தி தன் தாய்நாட்டை போற்றி எழுதத் தொடங்கினார்.
பதிப்புரிமை
சமரக்கோன் நள்ளிரவு கடந்தும் எழுதினார். சிரஞ்சீவித்துவம் பெற்ற 'நமோ நமோ மாதா' பிறந்தது. இவர் இதை தான் ஆசிரியராகவிருந்த மஹிந்த கல்லூரிக்கு எடுத்துச் சென்று இசையமைத்து தனது மாணவர்களுக்கு பாடக்கற்பித்தார். இந்த பாடல் பிரபலமடைந்தது. இது 1946 இல் வெளிவந்த இசைத்தட்டில் சேர்க்கப்பட்டது. தானே சிறந்த பாடகராக இருந்தமையால், தனது மனைவியான சுவர்ண டி சில்வாவுடன் இணைந்து பாடலை பதிவு செய்தார். சுவர்ண டி சில்வா பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞரான டன்ஸ்ரன் டி சில்வாவின் சகோதரியாவார்.
இந்த பாடல் இவரால் வெளியிடப்பட்ட கவிதை புத்தகத்திலும் சேர்க்கப்பட்டது. அதன் பெயர் 'கீத குமுதின' ஆகும். அச்சக உரிமையாளரான ஆர்.கே.டபிள்யூ. ஸ்ரீவர்தனவிற்கு அச்சுக் கூலியை கொடுக்க முடியாத நிலையில், சமரக்கோன் தனது பதிப்புரிமையை அவரிடம் கையளித்தார். பின்பு அவரது படைப்பு தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படும்போது, சமரக்கோன் இதையிட்டு கவலைப்பட வேண்டியிருந்தது.
கந்தர்வ சபா தேசிய கீதத்தை தெரிவதற்காக போட்டியை நடத்தியபோது சமரக்கோன் இந்தியாவுக்கு போயிருந்தார். ஆனால் இவரது மனைவியும் சகோதரனும் அவரது ' நமோ நமோ மாதா' கீதத்தை போட்டிக்கு சமர்பித்தனர். முழுத் தகுதியிருந்த போதிலும் இது கவனிக்கப்படாது இலங்க சிங்க- எதிரிசிங்க ஜோடியில் ஸ்ரீலங்கா மாதா யஸ மஹிம'' தெரிவு செய்யப்பட்டது.
போட்டியில் வென்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முறை காரணமாக 'யஸ மஹம' பலராலும் வெறுக்கப்பட்டது. எந்த வித உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாதபோதும் நமோ நமோ மாதாவுக்கு கூடிய வாய்ப்புகளும், பாராட்டும் கிடைத்துக் கொண்டிருந்தது. சாதாரண மக்களிடமோ இதன் பிரபலம் காரணமாக பொதுசன அபிப்பிராயம் யஸ மஹிமவை விட நமோ நமோ மாதாவுக்கு சாதகமாக இருந்தது.
ஒரு பொது நிகழ்வின்போது, கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் 50 அங்கத்தவர் கொண்ட பாட்டுக் குழு பாடியதன்பின் இந்தப் பாடல் பிரபலமாயிற்று. இது அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நமோ நமோ மாதா உண்மையாக தேசிய கீதம் போல பிரபலமாகிக் கொண்டே வந்தது.
ஈ.ஏ.பி விஜயரட்ண
1950 இல் நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன, நன்கு பிரபலமாகியிருந்த நமோ நமோ மாதா உத்தியோகபூர்வ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை கொண்டுவந்தார். பிரதமர் டி.எஸ். சேனநாயக்க, இந்த விடயத்தை இறுதி செய்யுமுகமாக உள்நாட்டு அலுவலகங்கள், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சேர். ஈ.ஏ.பி. விஜயரட்னவின் (வைத்தியர் நிஸங்க விஜயரட்னவின் தந்தை) தலைமையில் ஒரு தெரிவுக்குழுவை அடைத்தார். இவர் ஒலிவர் குணதிலகவின் இடத்துக்கு வந்தவர்.
விஜயரட்னவின் தலைமையிலான குழு நமோ நமோ மாதாவையும் வேறு சில பாடல்களையும் கவனதில் எடுத்து சமரக்கோனின் பாடல் தேசிய கீதமாக வேண்டுமென தீர்மானித்தது.
இருப்பினும் ஒரு சிறிய தடங்கள் இருந்தது. இந்த குழு சொற்களில் சில சிறிய மாற்றங்கள் செய்யவேண்டுமென கருதியது. அப்போது இந்தியாவிலிருந்த சமரக்கோன் சேர். எட்வின் ஏ.பி. விஜயரட்னவின் அழைப்பின் பேரில் 1951இன் நடுப்பகுதியில் நாடு திரும்பினார்.
இந்தப் பாடல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் நாடு இருந்தபோது எழுதப்பட்டது. இப்போது நாடு சுதந்திரமடைந்த நிலையில் பாடலின் 10 ஆவது வரி பொருத்தமற்று காணப்பட்டது. இதனால் இதை மாற்ற வேண்டியிருந்தது. சமரக்கோன் இந்த வரியை மாற்ற சம்மதித்தார்.
எனவே நவ ஜீவன தெமினே என்பது நவ ஜீவன தெமினே நிதின அப்ப புபுது கரன் மாதா என ஆனந்த சமரக்கோனின் மனப்பூர்வமான சம்மதத்டன் மாற்றப்பட்டது.
பின்னர் ஓகஸ்ட் 1951 இல் சேர் ஈ.ஏ.பி. விஜயரட்ன நமோ நமோ மாதா என்ற பாடலை தேசிய கீதமாக சிபாரிசு செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பித்தார். இது அமைச்சரவையால் ஏகமனதாக ஏற்கப்பட்டு நவம்பர் 22 ,1951 இல் தேசிய கீதமாக்கப்பட்டது.
அப்போது, டி.எஸ். சேனாநாயக்கவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருந்தார்கள். ஜி.ஜி.பொன்னம்பலம், அ.சிற்றம்பலம் ஆகியோர்களே அவர்கள். இவர்கள் கேட்க முன்னரே டி.எஸ்.சேனநாயக்கா, பொருத்தமான மொழிபெயர்ப்பு ஒன்று முறையாக ஆக்கப்பட வேண்டுமென கூறினார். ஈ.ஏ.பி.விஜயரட்னவின் தலைமையிலான தெரிவுக்குழு தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் ஒன்று இருக்கும் என்பதை கொள்கையளவில் ஏற்றியிருந்தது.
நல்லதம்பி
தமிழ் புலமையாளரான பண்டிதர் எம்.நல்லதம்பியிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. வரிக்கு வரியின் சுத்தமான மொழிபெயர்ப்பு ஒன்று செய்யப்பட்டது. தமிழ் வடிவம் பயன்பாட்டுக்கு வந்தது. இது வடக்கு கிழக்கில் தமிழர் அதிகமாக வாழும் பகுதிகளில் உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் அதிகம் பாடப்பட்டது.
இந்த கீதம் நாட்டின் புகழ் பாடுவதாகவும், அதற்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அமைந்திருந்தது. இது எந்த ஒரு இனம், மதம், சாதி, சமுதாயத்தை புகழ்வதாக இருக்கவில்லை. இதுவே இந்த தேசிய கீதத்தின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த பாடல் குறுகிய வாதங்களை, குழச்சிந்தனைகளை கொண்டிருக்கவில்லை. இது இலங்கை மாதாவின் சகல பிள்ளைகளினதும் நாட்டுப்பற்று உணர்வை தட்டிக் கொடுப்பதாக இருந்தது.
எனவே தமிழ் மக்கள் இந்த தேசிய கீதத்தை ஏற்காது விடவோ அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கவோ காரணம் இருக்கவில்லை. சிங்கள சொற்களின் கருத்து தெரிய வந்த போது எந்த ஒரு தமிழருக்கும் இது எதிர்க்க வேண்டியதொன்றாக இருக்கவில்லை. வரிக்கு வரியான தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்கக் கூடியதாக இருந்தப்போது இலங்கை வாழ் தமிர்கள் உணர்வோடும் பற்றோரும் தேசிய கீதத்தை தமிழில் இசைக்கலாயினர்.
சுதந்திரத்தின் நான்கு ஆண்டுகளின் பின் பெர்பரவரி 4, 1952 இல் சுதந்திரதின கொண்டாட்டங்களில் உத்தியோக பூர்வ தேசிய கீதமாக ' நமோ நமோ மாதா பாடப்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு, கச்சேரிகளில் நடந்த சுதந்திரதின கொண்டாட்டங்களின்போது தமிழ் வடிவமான நமோ நமோ தாயே பாடப்பட்டது. சேர். ஜோன் கொத்தலாவல 1954 இல் யாழ்ப்பாணம் வந்தபோது, பிரதமருக்கு மரியாதை செய்யுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் பாடப்பட்டது.
மார்ச் 12, 1952 இல் 'நமோ நமோ மாதா' வை தேசிய கீதமென அறிவிக்கும் பெரிய அரசாங்க விளம்பரங்கள் சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. சிங்களப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகளில் அந்தந்த மொழிகளிலேயே தேசிய கீதம் வெளியிடப்பட்டபோதும் ஆங்கில பத்திரிகைகளில் சிங்கள சொற்கள் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது.
நமோ நமோ மாதா உத்தியோக பூர்வ தேசிய கீதமாக பாடப்பட்டபோதும், இசையில் அல்லது பாடும் விதத்தில் ஒரு வகைமை காணப்படவில்லை. பாடகர்களும், இசைக்குழுக்களும் வித்தியாசமான முறையில் பாடினர். இது குழப்பங்களை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இதனால், தேசிய கீதத்தை பாடும்போடு ஒருவகைமையை பேணும் நோக்கில், அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது. ஏழு பேர் கொண்ட குழு ஒன்று 1953 இல் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஆனந்த சமரக்கோனுடன், டேவார் சூரியசேன, ஜே.டி.ஏ. பெரேரா ஆகியோர் இருந்தனர்.
இந்த குழு தேசிய கீதம் எவ்வாறு பாடப்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளுடன் கொடுத்தது. இந்த இசை, சமரக்கோன் முதலில் அமைத்த இசையின் முன்னேறிய வடிவமாக காணப்பட்டது. எச்.எம்.வி இசைத்தட்டுகளின் முகவராக இருந்த புகழ்பெற்ற கார்கில்ஸ் நிறுவனத்திடம் தேசிய கீதத்ததின் இசைத் தட்டுகளை செய்வதற்கான கட்டளை வழங்கப்பட்டது.
இலங்கை வானொலி
தேசிய கீதத்ததை தமிழ் வடிவத்திலும் ஒரு இசைத்தட்டு தயாரிக்கப்பட்டது. பின்னணி வாத்தியங்களும் இசையமைப்பும் சிங்கள வடிவத்தையே ஒத்திருந்தது. பண்டிதர் நல்லதம்பியால் எழுதப்பட்ட சொற்களை சங்கரி, மீனா என்ற இரு பெண்கள் பாடினர். இந்த தமிழ் வடிவம் இலங்கை வானொலியில் பெப்ரவரி 4, 1955 இல் ஒலிபரப்பாகியது.
ஜூன் 24, 1954 இல் சேர். ஜோன் கொத்தலாவலையின் அமைச்சரவை தேசிய கீதத்தில் இராகத்தையும் இசையையும் முறைமையாக அங்கீகரித்தது. அன்றைய தினம் 2500 ரூபா கொடுப்பனவு செய்யப்பட்டு 'நமோ நமோ மாதா' அரசாங்கத்தினால் முறையாக பொறுப்பேற்கப்பட்டது. ஆனால் இந்த பணமானது ஆனந்த சமரக்கோனிடம் சேரவில்லை. இந்த கீதத்தை ஒரு கவிதைப் புத்தகத்தில் வெளியிட்ட அச்சக உரிமையாளரிடம் பதிப்புரிமை மாற்றப்பட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
ஒருவர் எழுதிய பாடல் தேசிய கீதமாக ஏற்கப்படுவது என்பது உண்மையில் மாபெரும் சாதனையே. இதை சாதித்த சமரக்கோன் பெரும் புகழில் மூழ்கித் திளைத்திருக்க வேண்டியவர். புhவம் அது நடக்கவில்லை. இன்பலோக வாழ்வுக்கு பதிலாக, சோதனைகளும் வேதனைகளும் இவரைக் காத்திருந்தன. சிங்கள தேசிய வாதத்தை கிளப்பி 1956 இல் எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமரானார். ' அப்பே ஆண்டுவ' என புகழ்ப்பட்ட இவரது புதிய அரசாங்கம் விரைவிலேயே பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்தது. அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தங்களும், இனக் கலவரமும், வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றன.
சாட்டுப்போக்கு தேடிய சில பிரிவினர் தேசிய கீதத்தின் மீது பழி போட்டனர். (இதில் சுயலாபமும் சம்பந்தப்பட்டிருக்கலாம்.) பண்டாரநாயக்கவின் ஆட்சியில் நாட்டுக்கு வந்த கேடுகளுக்கு இந்த தேசிய கீதமே காரணமென பகுத்தறிவற்ற முறையில் வெறித்தனமான கிளர்ச்சியூட்டும் மூடநம்பிக்கை பிரச்சாரப்படுத்தப்பட்டது.
பிரச்சாரம்
நமோ நமோ மாதா வுக்கு எதிராக ஒரு நச்சுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 'நமோ நமோ மாதா' வின் மாத்திரைகள் அதிர்ஷ்டமற்றவை எனவும் நாட்டின் துன்பங்களுக்கும் ஏற்பட்ட கெடுதிகளுக்கும் காரணமானவை எனவும் குற்றஞ் சாட்டப்பட்டது. பாடலின் தொடக்கத்தில் வரும் 'ந' என்ற எழுத்து தீங்கு தருவது என கூறப்பட்டது. முதல் மூன்று அசைகளினதும் சீர் நாட்டிற்கு கெடுதி சேர்ப்பதாக உள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டது. ந-மோ-ந என்ற தொடக்க அசைகள் குறில்-நெடில்-குறில் என அமைந்தமை கெடுதி விளைவிக்கும் ஒழுங்கு (சீர்) என கூறப்பட்டது.
விமர்சனங்கள் அதிகரித்தபோது, இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு ஆனந்த சமரக்கோன் தள்ளப்பட்டார். அவர் பத்திரிகை விவாதங்களில் பங்குபற்றினார். 'நமோ நமோ மாதாவை' பாதுகாக்க பொதுக் கூட்டங்களிலும் உரையாற்றினார்.
சமரக்கோனுக்கு உண்டான நிதிநெருக்கடி, நிலைமையை மேலும் மோசமாக்கியது. இவர் இலங்கை வானொலியில் நடத்தப்பட்ட கல்வி சேவையில் நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்தினாலும் இவரது சிறப்பான பாடல்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. இவர் 1957 இல் அமரனீய லங்கா என்னும் இசை – நடன நிகழ்வை தயாரித்தார். ஆனால் இது படுதோல்வி கண்டது. 'நமோ நமோ மாதா' மீதான மூர்க்கத்தனமான தாக்குதல் சமரக்கோனின் மன அமைதியை கெடுத்தது.
செப்டெம்பர் 1959 இல் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார். 1960 மார்ச்சில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் ஒன்றுக்கு வழிவகுத்தது. டட்லி சேனாநாயக்கவின் சிறுபான்மை அரசாங்கம் சொற்ப காலத்தில் வீழ்ச்சி கண்டது. புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜூலை 1960 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை இலகுவாக கைப்பற்றியது. பண்டார நாயக்காவின் மனைவி சிறிமா பண்டாரநாயக்கா பிரதமரானார்.
புதிய அரசாங்கம் 'நமோ நமோ மாதா' வுக்கு எதிரான பிரசாரத்தை பெரிய விடயமாக எடுத்துக்கொண்டது. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான மைத்திரிபால சேனாநாயக்க இந்த பிரச்சினையை ஆராயவும், நாட்டின் துன்பங்களுக்கு இந்த தேசிய கீதம் காரணமாக அமைகின்றதா, இல்லையா என தீர்மானிக்கவும் என நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.
இந்தக் குழு 'நமோ நமோ மாதா' என்னும் சொற்களை நீக்கி, பதிலாக 'ஸ்ரீலங்கா மாதா' என்னும் சொற்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என என சிபாரிசு செய்தது. ஆனந்த சமரக்கோன் இதை கடுமையாக எதிர்த்தார். ஆயினும் அரசாங்கம் குழுவினர் சிபாரிசை ஏற்று பெப்ரவரி 1961 இல் ஒரு தலைப்பட்சமாக தேசிய கீதத்தில் மாற்றத்தை செய்தது.
இதற்கு ஆனந்த சமரக்கோனின் சம்மதம் பெறப்படவில்லை. அரசாங்கத்திடம் பதிப்புரிமை இருந்தப்படியால், இவரலர் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
மனதை கலங்க வைத்த கட்டுரை
இதனால் விளைந்த சோகத்தில் ஆனந்த சமரகோன் உருக்குலைந்து போனார். குமுதினி ஹெட்டியாராய்ச்சி எனும் பிரபல இதழியலாளர் சில வருடங்களுக்கு முன் சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் ஆனந்த சமரக்கோனைப்பற்றி மனதை உருக்க வைக்கும் கட்டுரை ஒன்றை எழுதினார். ஆந்த கட்டுரையில், தனது பெரியப்பா இந்த விடயத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை கவிஞரின் பெறாமகன் சுனில் சமரக்கோனின் வார்த்தைகளில் தந்துள்ளார்.
ஒரு நாள் சுனில் பதினொரு வயது பையனாக இருந்தபோது அவனது பெரியப்பா அவரது பேபி ஒஸ்டின் காரை 'கேட்' அருகில் நிறுத்தி விட்டு கத்தினார். 'மகனே எனது தலையை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வேறு தலையை பொருத்தியுள்ளார்கள்.'
'பெரியப்பா இப்படிக் கூறியதன் அர்த்தம் எனக்கு அப்போது விளங்கவில்லை. அவர் உண்மையில் தேசிய கீதத்தில் முதல் வரியான 'நமோ நமோ மாதாவை' நீக்கிவிட்டு பதிலுக்கு ஸ்ரீ லங்கா மாதா என பிரதியீடு செய்ததைதான் அவ்வாறு கூறினார்' என தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரக்கோனின் பெறாமகன் சுனில் சமரக்கோன் கூறினார்.
'தனக்கு சஞ்சலம் ஏற்பட்ட சமயங்களில் அவர் அப்பாவுடன் பேச வந்தது எனக்கு ஞாபகமாகவுள்ளது. அவர் காரை நிறுத்தியப்போது அவரை வரவேற்க நான் சென்றேன். அப்போது எனது தோளில் தன் கைகளை வைத்து, பெரும் சோகத்துடன் இந்த வார்த்தைகளை கூறினார். இதன் பின் அவர் பழைய மாதிரி வரவேயில்லை. அவரிடம் சொல்லாமலேயே அவர்கள் அதை மாற்றிவிட்டனர். 'இவ்வாறு சுனிலை மேற்கோள் காட் குமுதினி எழுதினார்.
ஏபரல் 5 , 1962 ஆனந்த சமரக்கோன் மரணித்த நாள். கதவை தட்டியும் எழும்பாதிருந்தமையால் கதவை உடைக்க வேண்டியிருந்தது. கூடுதல் நித்திரை மாத்திரைகளை எடுத்தால் மரணம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. தனது கீதம் எவ்வாறு உருக்குலைக்கப்பட்டது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் டட்லி சேனநாயக்கவுக்கு முறையிடும் கடிதம் ஒன்று மேசையில் கிடந்தது. தியானத்திலுள்ள சாந்த மூர்த்தியான புத்தரை மான் ஒன்று பார்ப்பதைப் போன்ற படம் முக்காலியில் இருந்தது.
நூற்றாண்டு விழா
இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ரைம்ஸ் ஒப் சிலோன்' பத்திரிகையின் 'ரைம்ஸ்மான்' பத்திக்கு ஒரு கடிதம் எழுதினார்.
எனது கீதத்துக்கு தலையை வெட்டி விட்டனர். அது அந்த பாடலை மட்டும் அழிக்கவில்லை. அதை எழுதியவரின் வாழ்க்கையும் அழித்துவிட்டது. நான் விரக்தியிலுள்ளேன். என் இதயம் நொறுங்கிவிட்டது. ஒரு அப்பாவி கவிஞனுக்கு இப்படியெல்லாம் செய்யக் கூடிய நாட்டில் வாழ்வது துரதிஷ்டமே'. சாவதே நல்லது''
இந்த நாட்டுக்கு தேசிய கீதத்தை காணிக்கையாக அளித்த கவிஞரும் பாடகருமான ஆனந்த சமரக்கோனின் பிறப்பு நூற்றாண்டு ஜனவரி 13, 2011 அன்று ஆகும். இந்த நாட்டுக்கு இவரை பெரியளவில் நினைவு கூறவேண்டிய கடப்பாடு உள்ளது.
இவரது தேசிய கீதத்தை எந்த மொழியில் பாடலாம் என அற்பத்தனமாக சச்சரவுகளில் ஈடுபடுதவதற்குப் பதிலாக எமக்கு தேசிய கீதத்தை தந்த இந்த மனிதனின் பிறப்பு நூற்றாண்டை கொண்டாடுவது எவ்வளவோ பயனுடைய விடயமாக இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’