வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 ஜனவரி, 2011

குடாநாட்டு கொலைகள் தனிப்பட்ட ரீதியிலானவை: பொலிஸ் அத்தியட்சகர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இடம்பெறுகின்றன என யாழ் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை மிகைப்படுத்தி பிரமாண்டப்படுத்துவதாக தெரிவித்த அவர், ஊடகவிலாளர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் தம்முடன் உரையாடினால் சிறந்தது என அவர் தெரிவித்தார்.
கொள்ளைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டவில்லை என்பது பற்றி அவர் எதுவுமே கூறவில்லை. யாழ் குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுவதாக ஊடகங்களே செய்திகளை பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிடுவதாக அவர் குறைகூறினார்.
யாழ். மக்களுக்காக தாங்கள் நித்திரையின்றி பணிகளை ஆற்றி வருவதாகவும் மக்களின் நிம்மதியான நித்திரைக்காகவே பொலிஸார் அர்ப்பணிப்புடன் சேவையை செய்வதாகவும் தெரிவித்தார்.
சந்தேகத்திடமான முறையில் படையினரோ, பொலிஸாரோ வருகை தந்தால் கூட அவர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தாவிட்டால் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம். சிவில் உடையில் வந்து கதவை தட்டினால் திறக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே உடமைகளை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பற்றது எனத் தெரிவித்த அவர், வங்கிகளில் அவற்றை வைக்குமாறும் ஆலோசனை கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’