சிரேஷ்ட அமைச்சர்களின் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியினரால் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெவிக்கப் பட்டது.
இதனால் ஏற்பட்ட இருதரப்பு விவாதங்கள் கூச்சல் குழப்பங்களை கட்டுப் படுத்துவதற்கு முடியாது போனமையால் சபையை 30 நிமிடங்கள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஒத்திவைத்தார்.
பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
பின்னர் மாலை வேளையில் சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்டது.
இந்த பிரேரணையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பி. சர்ப்பித்து உரையாற்றினார்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆளும் தரப்பிலிருந்து கடுமையான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் கூச்சல்களும் எழுந்தன.
குறித்த பிரேரணை பொருத்தமற்றது என்றும் சத்தமிட்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’