தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று காலை 10.00 மணியளவில், கொழும்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இல்லத்தில் கூடியது.
இதன் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
ஒன்று : எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரங்கத்தைப் பயன்படுத்துவது கூடாது. இதன் கொள்கைகளை மாசுபடுத்தக் கூடாது. அரங்கத்தின் தனித்துவம், கள நிலவரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது.
கட்சிகளின் தனித்துவம் மற்றும் களநிலவரங்களைக் கருத்திற்கொண்டு எந்தவகையிலும் அரங்கத்தை தேர்தலுக்காகப் பயன்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, யாழ் நிலவரம் மற்றும் மக்கள் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமெனக் கோருவது,
மூன்றாவது, தேசிய கீதம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி தமிழ் மக்களை, பங்காளிகள் என்ற வகையில் துன்புறுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்வது என்பன குறித்து தமிழ் அரங்கத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில், புளொட் சித்தார்த்தன், ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி, ஸ்ரீ டெலோ ஆலோசகர், ஜனநாயக மக்கள் முன்னணி செயலாளர் குருபரன், ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி ஸ்ரீதரன் மற்றும் தர்மரட்னம் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொலைபேசியூடாகத் தமது ஆதரவை அரங்கத்துக்கு வழங்கியிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’