ந
கர அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக யாழ்.நகரில் அகற்றப்பட்ட நடைபாதை பழவியாபாரிகளுக்கென புதிதாக அமைக்கப்பட்ட அங்காடி வியாபார கடைப்பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பழவியாபாரிகளிடம் கையளித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)இன்றுகாலை அமைச்சரவர்களின் யாழ்.பணிமனைக்கு வருகை தந்த பழக்கடை சங்கத் தலைவர் சு.ஜெகராஜசிங்கம் செயலாளர் மா.விஜயசெல்வம் தலைமையிலான அனைத்து அங்காடி பழவியாபாரிகளுடனும் கலந்தரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.மாநகரசபைக்கும் பழவியாபாரிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை தெளிவுபடுத்தினார். மேலும் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரவர்கள் கடைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள பழவியாபாரிகள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார்.
இச்சந்திப்பின் இறுதியில் எவ்வித பாரபட்சமும் இன்றி அங்காடி கடைகளை ஒதுக்கீடு செய்வதற்காக லொத்தர் முறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது பணிமனையிலிருந்து அனைவருடனும் யாழ்.மத்திய பஸ் நிலையப்பகுதிக்கு புறப்பட்டார்
பஸ் நிலையப்பகுதியில் பழக்கடைகளுக்கென ஒதுக்கப்பட்ட அங்காடி பகுதியில் அமைச்சரவர்களினால் வழங்கப்பட்ட லொத்தர் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட பழவியாபாரிகள் தமக்குரிய கடைகளைத் தாமே தெரிவுசெய்துகொண்டனர். இச்சமயம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆணையாளர் மு.சரவணபவ மாநகர பதில் செயலாளர் இரத்தினசிங்கம் பொறியியலாளர் ஹென்ஸ்டன் வழக்கறிஞர் ரங்கன் ஆகியோர் உட்பட பெருமளவிலான வியாபாரிகளும் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’