வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 ஜனவரி, 2011

பூசா கைதிகளில் 50 சதவீதமானோரை விடுவிக்க நடவடிக்கை

பூ
சா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 50 சதவீதமானோரை விடுதலை செய்யவும் ஏனையோருக்கு புனர்வாழ்வளிக்கவுமுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னாண்டோ தலைமையிலான 4 பேர் கொண்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று புதன்கிழமை பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்தது.
இக்குழுவினர் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆவணங்களை பரிசோதித்துள்ளனர்.
பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சட்டமா அதிபர் திணைக்கம் விரைவில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசெம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள 20 கைதிகளிடம் சாட்சியங்களை பதிவுசெய்துகொண்டது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுக்கமையவே சட்டமா அதிபர் திணைக்களத்தின் குழு பூசா தடுப்பு முகாமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’